வடகொரிய அதிபர் வெறுக்கும் ஒரு பாறை.. அந்த தீவு மேல அப்படி என்ன தான் கடுப்பு? எல்லா ஏவுகணையையும் அங்கையே அனுப்புறாரு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியா: ஏவுகணை சோதனைக்கு பெயர்போன வடகொரியா ஒரு தீவின் மீது மட்டும் அதிகளவில் ஏவுகணை சோதனை செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

Advertising
>
Advertising

சாப்பிட்ட உடனே டயர்டு ஆகுது.. 7 வருஷமா மனைவியின் சமையலில் மறைந்திருந்த ரகசியம்.. கிச்சனில் கேமரா மாட்டிய கணவனுக்கு.. தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை

ஒரே தீவில் ஏவுகணை சோதனை:

யார் என்ன சொன்னாலும் தான் செய்வதை தான் செய்வேன் என்றளவில் வடகொரியா ஒரு  மாதத்திற்கு பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக ஒரு இடத்தில் மட்டும் பல ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அல்சோம் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவு, வட கொரியாவின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து 18 கிலோமீட்டர் (11 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.

அல்சோம் தீவு மீது வெறுப்பை கொண்டிருக்க வேண்டும்:

இங்கு மட்டும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை, 25 -க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவை உன்னிப்பாக கவனித்து வரும் தென்கொரியாவின் ஆயுத நிபுணர் ஜோசப் டெம்ப்சே, தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக, 'வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-க்கு அல்சோம் தீவு மீது வெறுப்பை கொண்டிருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதோடு அல்சோம் தீவு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னால் 'மிகவும் வெறுக்கப்படும் பாறை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் கண்டனம்:

மேலும், கிம் ஜோங் உன், அல்சோம் தீவில், ஐ.ஆர்.பி.எம். இடைநிலை தூர புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து பார்த்துள்ளார். இதற்கான புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தன. இந்த சோதனைக்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனங்களும் தெரிவித்து இருந்தன. இந்த அல்சோம் தீவுப் பகுதியில் வடகொரியாவின் கப்பல்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. வடகொரிய அதிபர் கிம், தனது ராணுவ ஆயுதக் கிடங்கை நவீனமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வெவ்வேறு இடங்களில் இருந்து இலக்கு:

அல்சோம் தீவு மீது ஏவுகணை சோதனை குண்டுவீச்சு தொடரும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வரும் தென் கொரியாவின் குடியரசுத் தலைவர் நீல நிற மாளிகையின், முன்னாள் போர்த்திறன் பாதுகாப்பு செயலாளரான சியோன் சியோங்-வுன் இதுகுறித்து கூறும்போது, 'வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே இலக்கான அல்சோம் தீவைத் தாக்குவதன் மூலம், வட கொரியா தனது ஏவுகணைகளின் திறனை சோதித்து மேம்படுத்த முடியும்' எனக் கூறியுள்ளார். அதோடு அல்சோம் தீவை உலக நாடுகள் சாட்டிலைட்டுகளால் கவனமாக பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மலிவு விலைக்கு பைக் இருக்கு, வேணுமா? ஃபேஸ்புக் நண்பன் போட்ட மாஸ்டர் பிளான்.. திடீர்னு கழுத்தில் வைக்கப்பட்ட துப்பாக்கி.. என்ன நடந்தது?

NORTH KOREA, MISSILE TESTS, ISLAND OF ALSOM, வடகொரியா, அல்சோம் தீவு, ஏவுகணை சோதனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்