'மூக்குல ஸ்ப்ரே பண்ணிகிட்டா போதும்.. 99.9% கொரோனாவ உண்டு இல்லன்னு பண்ணுதா?'.. ‘குறிப்பிட்ட’ தடுப்பு மருந்து தொடர்பான நம்பிக்கை தரும் ஆய்வு முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவை சேர்ந்த சானோடைஸ் நிறுவனம் தற்போது கொரோனாவுக்கு எதிராக ஒரு ஸ்பிரேவை உருவாக்கி இருக்கிறது.

இந்த ஸ்பிரே தடுப்பு மருந்து 99.9% கொரோன வைரஸை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாக பரிசோதனையில் உறுதி ஆகி இருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிரான பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு வருட காலத்திற்கு மேலாக உலக மக்களை கொரோனா ஆட்டிப் படைத்து வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு வழிமுறைகள் மட்டுமே மனிதர்கள் பின்பற்றி வந்தனர். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு முறைகளை கடைப் பிடிப்பதில் உறுதியாக இருக்கின்றன.

அவற்றை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வர, அந்நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மருத்துவர்களும் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்தாலும் மக்கள் வழக்கமாக கடைபிடித்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பரவல் வழிமுறைகளை கடைபிடிப்பதை தொடர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சோதனைகளின் இறுதி கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சில மருந்துகள் இருக்கின்றன. எனினும் சில தடுப்பு மருந்துகள் நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அப்படி மூக்கு வழியாகச் செலுத்தி கொரோனாவை எதிர்கொள்ளக்கூடிய சில மருந்துகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் வான்கவூரைச் சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தான் Nitric Oxide Nasal Spray (NONS)என்கிற மருந்தை உருவாகியுள்ளது. இந்த மருந்து 99.9% கொரோனாவை எதிர்கொள்வதற்கான செயல்திறன் மிக்கது என்று தற்போது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மாநில பல்கலைக்கழக ஆண்டி வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் தான் இந்த பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனையை ஒட்டி இந்த தடுப்பு மருந்துக்கு இப்படியான செயல்திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை இரண்டாம் கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த மருந்து நல்ல பலனை தருவதால் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் அறிஞர்கள் இறங்கியிருக்கின்றனர்.

பிரிட்டனில் இந்த மருந்துக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைகளில் NHS அறக்கட்டளை மூலம் இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை பணிகள் வேகமாக நடத்தப்படுகின்றது.

ALSO READ: “எதையும் மிஸ் பண்ணிடலல?.. போலாம் ரைட்!” ... கார் நகர்ந்ததுக்கு அப்புறம் தான் அந்த ‘ட்விஸ்ட்டே’ காத்திருக்கு! வைரல் வீடியோ!

இந்த மருந்து நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட ஒன்று என்பதும் இதனை முகத்தில் ஸ்பிரே செய்தால் இது, கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் செல்வதற்கு எதிராக வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது. மக்கள் வெளியே செல்லும்போது இந்த மருந்தை முன்னெச்சரிக்கையாக முகத்தில் ஸ்ப்ரே செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதேபோல் தொண்டையில் இந்த மருந்து படும்படி வாய் கொப்பளித்து, மூக்கு துவாரங்களில் இந்த மருந்தை செலுத்தி சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சை முறையின் மூலமும் இந்த மருந்தை பயன்படுத்த முடியும்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்