தகர்க்கப்படும் 100 மீட்டர் உயர இரட்டை கோபுரங்கள்.. இறுதிக்கட்ட பணியில் அதிகாரிகள்.. மிரளவைக்கும் தகவல்கள்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நொய்டாவின் 93ஏ செக்டாரில் அமைந்து உள்ள சூப்பர் டெக் இரட்டை கட்டிடங்களை இடிக்கும் இறுதிக்கட்ட பணியில் இறங்கியுள்ளது நொய்டா கட்டிட ஆராய்ச்சி ஆணையம். இதன்படி, மக்களை வெளியற்றுவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளனர் அதிகாரிகள்.

Advertising
>
Advertising

Also Read | காதலியை மீட் பண்ண இளைஞர் போட்ட பிளான்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!

100 மீட்டர் கட்டிடம்

நொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருக்கும் இந்த சூப்பர் டெக் இரட்டை கட்டிம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என இந்த கட்டிட உரிமையாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் டெக் இரட்டை கட்டிடத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி வெளிவந்த தீர்ப்பில், '3 மாதங்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி இந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வெளியேற்றம்

இந்த சூப்பர் டெக் கட்டிடத்தில் ஒன்று 103 மீட்டர் உயரத்துடனும் மற்றொன்று 97 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி. இந்நிலையில், இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது நொய்டா கட்டிட ஆராய்ச்சி ஆணையம்.

அதன்படி இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள எமரால்ட் நீதிமன்றத்தின் இரண்டு டவர்கள் மற்றும் ஏடிஎஸ் வில்லேஜை சேர்ந்த குடியிருப்பாளர்கள் வரும் 28 ஆம் தேதி காலை 7 மணிக்கே தங்களது வீடுகளை விட்டு வாகனங்களுடன் வெளியேற வேண்டும். கட்டிடம் இடிக்கப்பட்டு உரிய அனுமதி கிடைத்த பிறகு மாலை 4 மணிக்கு மேல் குடியிருப்பாளார்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டு 28 ஆம் தேதி மதியம் 2.15 மணி முதல் 2.45 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பிரம்மாண்ட கட்டிடங்களை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்காக ரூர்கியில் உள்ள நொய்டா ஆணையம் மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் Edifice Engineering என்னும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள Jet Demolition நிறுவனத்துடன் இந்த கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட இருக்கிறது Edifice Engineering.

Also Read | ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க கூட மாட்டாங்க..!

NOIDA, NOIDA TWIN TOWER, NOIDA TWIN TOWER DEMOLITION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்