2020ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!.. எதற்காக வழங்கப்படுகிறது?.. விருது பெறுபவர்கள் யார்?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று (அக்.,05) முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நோபல் பரிசுக்கு ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நோவல் வைரஸ் மற்றும் ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக 3 பேருக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாளை (6ம் தேதி) இயற்பியல் துறைக்கும், 7ம் தேதி வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக,1901ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர், 1969ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசும் சேர்க்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு என 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க கஷ்டப்பட்டாலும் பையன் டாக்டரா திரும்பி வருவான்னு நெனச்சனே'... 'உடைந்து போன மொத்த குடும்பம்'... ரஷ்யாவில் தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!
- 'இனி தைரியமா ஆபீஸ் போகலாம்...' 'அலுவலகங்களின் பாதுகாப்பிற்காக அறிமுகமாகும் பேக் டூ வொர்க் செயலி...' - அப்படி என்ன இதன் சிறப்பம்சங்கள்...?
- 'கொரோனாவ விட கொடிய நோய் இந்த நாட்டுல இருக்கு...' 'இதைவிட மூணு மடங்கு ஸ்பீடா பரவுது...' - சீனா கடும் எச்சரிக்கை...!
- “இந்த சித்த மருந்து கொரோனாவை ஒழிக்குமா?.. மத்திய அமைச்சகம் ஆகஸ்டு 3-க்குள் இத பண்ணனும்!”... சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி உத்தரவு!
- 'சீனாவில் பரவும் அடுத்த வைரஸ்...' 'இது கொரோனாவ விட செம ஸ்பீடா ஆள காலி பண்ணிடும்...' - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...!
- VIDEO: 'ஊரடங்கால வேல போச்சு... கந்துவட்டி கொடுமை'... மகனின் டாக்டர் கனவுக்காக... ஏழைத் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!
- ‘தூய தமிழ்ல பேச தெரியுமா?’.. அப்போ காத்திருக்கு ‘பரிசுத்தொகை’.. தமிழக அரசின் ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- இத கண்டுபுடிச்சா ‘15 லட்சம் பரிசு’ உங்களுக்குதான்.. நாசாவின் ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- 'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
- ‘2 ரூபாய்க்கு கொரோனா மருந்து’.. ‘தமிழக’ மருத்துவரின் கண்டுபிடிப்பை பரிசீலிக்க.. சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு..!