இன்று என் 'வாழ்க்கையில' ஒரு பொன்னான நாள்...! அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மலாலா' திடீர் திருமணம்...! - கணவர் யார் தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தன் சமூகவலைத்தள பக்கம் மூலம் தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தாலிபான்களின் துப்பாக்கி சூட்டினால் உயிர்போகும் நிலைக்கு சென்று திரும்பியவர் 15 வயதான மலாலா. அதன்பின் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய மலாலா பெண் கல்விக்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பவராக பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதோடு, அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார்.

தற்போது 24 வயதான மலாலா பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த செவ்வாய்கிழமை தனக்கும் அஸ்ஸர் என்பவரும், பர்மிங்காம் நகரில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.

மலாலா தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் 4 புகைப்படங்களை பதிவிட்டு, 'இன்று என் வாழ்வில் ஒரு பொன்னான நாள். அஸ்ஸரும் நானும் வாழ்க்கையில் இணையர்களாக இணைந்துள்ளோம்' என மலாலா கூறியுள்ளார். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல்திறன் மையத்தின் பொது மேலாளர் அசர் மாலிக் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்கள் முன் மலாலா திருமணம் குறித்து 'மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் இருக்க விரும்பினால், நீங்கள் ஏன் திருமண ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும், அது ஏன் ஒரு கூட்டாண்மையாக இருக்கக்கூடாது?' என பதிவிட்டிருந்த கருத்து இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

AZHAR MALIK, MALALA YOUSAFZAI, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்