கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை.. நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை குறித்து நோபல் பரிசு வென்ற மலாலா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

VIDEO: 2 நாளா மலையில் சிக்கிய இளைஞர் மீட்பு.. பத்திரமா மேலே வந்ததும் அவர் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

கர்நாடக மாநிலம் உடுப்பி உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனால் 6 இஸ்லாமிய மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்து வந்த ஒரு மாணவியை, காவி துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹ் அக்பர்’ என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு மீண்ட மலாலா யூசுப்சாயி இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், ‘கல்லூரிகள் எங்களை கல்வியா? ஹிஜாபா? என்று தேர்வு செய்யும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி மறுப்பது அச்சுறுத்தும் செயலாக உள்ளது. குறைந்த ஆடை, அதிகமான ஆடை என ஆடையின் அடிப்படையில் பெண்களை ஏதேனும் வரம்புக்குள் அடையாளப்படுத்துதல் தொடர்கிறது. பெண்களை இவ்வாறாக ஓரங்கட்டும் செயல்களை இந்திய தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மலாலா யூசுப்சாயி கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றார். உலகிலேயே மிகச் சிறிய வயதில் அமைதிக்கான நோபல் விருதைப் பெற்ற முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுள் மாதிரி வந்து காப்பாத்திய வாட்ச்.. இப்போ புரியுது ஏன் நெறைய பேர் இந்த வாட்சை கட்டுறாங்கன்னு..!

KARNATAKA, STUDENTS, HIJAB, HIJAB ROW, FEMALE STUDENTS, INCIDENT, கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை, கர்நாடக மாநிலம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்