'சீன' மருத்துவரால்... வடகொரிய அதிபருக்கு 'கொரோனா' பரவியதா?... விலகாத மர்மம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்று காலை முதலே வடகொரிய அதிபர் உடல்நலமில்லாமல் இருப்பதாகவும், அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து அமெரிக்க உளவுத்துறை வடகொரியாவின் நகர்வுகளை மிகுந்த உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதற்கிடையில் இதய வால்வு சிகிச்சையளிக்க சீனாவில் இருந்து வந்த மருத்துவர் மூலமாக அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு கொரோனா பரவியதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதற்கு வடகொரியா அதிகாரிகள் எதிர்ப்போ, மறுப்போ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தென்கொரிய நாட்டின் அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''வடகொரியா அதிபர் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வட கொரியாவில் தற்போது மோசமான நிலை எதுவும் தென்படவில்லை,'' என தெரிவித்துள்ளனர். நட்பு நாடான சீனாவும் வடகொரியா அதிபர் தொடர்பான தகவல்களை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்