'எங்களுக்கு பாதுகாப்பு இல்ல!'.. மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்த டாக்டர்கள்... மர்மம் காக்கும் நாடு!.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், டாக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று டாக்டர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்துள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனை ஜன்னல்களிலிருந்து மர்மமான முறையில் விழுந்து உள்ளனர். இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பணி பாதுகாப்பு அச்சத்தை அளித்துள்ளது.
அந்த சுகாதாரப் பணியாளர்களில் இருவர் இறந்துவிட்டனர், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகளால் விசாரிக்கப்படும் இந்த மூன்று சம்பவங்களும் ரஷ்ய பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தீவிர விவாதத்தைத் தூண்டி உள்ளன.
தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் நோவஸ்மான்ஸ்கயா மாவட்ட மருத்துவமனையில் டாக்டர் அலெக்சாண்டர் ஷுலேபோவ் (37 ) ஆம்புலன்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். தற்கொலை முடிவை எடுக்கும் முன்னர் தமது சக மருத்துவர் ஒருவருடன் காணொலி ஒன்றை பதிவு செய்த அவர், தங்களை அதிகமாக வேலை வாங்குவதாகவும், பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி கொரோனா சிகிச்சைக்கு கட்டாயப்படுத்துவதாகவும், தங்களுக்கு கொரோனா உறுதியான பின்னரும் பணியில் தொடர கட்டாயப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் டாக்டர் ஷுலேபோவ் கூறியது உண்மைக்கு புறம்பானது எனக் கூறி, அவரது சக மருத்துவரிடம் ரஷ்ய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று டாக்டர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தொற்று காலகட்டத்தில்... மதுக்கடைகள் திறக்கப்படுவது ஏன்?.. அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு கருத்து!
- 'கொரோனா டூட்டிக்கு போன இளம் காவலர்'... 'சாலையில் திரும்பும்போது கண்முன்னே வந்த பயங்கரம்'... சென்னையில் நடந்த கோரம்!
- 'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’!
- கம்பம் அரசு மருத்துவமனையில் ‘4 நாளில் 40 பிரசவங்கள்’ பார்க்கப்பட்டது.. மருத்துவ அலுவலர் தகவல்..!
- VIDEO: 'அந்த காரணம் தான் அல்டிமேட்!'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை!.. டெல்லியில் பரபரப்பு!
- 'பிணவறையில் அழுகிய உடல்'... 'சுவிட்ச்சை ஆன் செய்ய மறந்த ஊழியர்'... காத்திருந்த அதிர்ச்சி!
- 'அதிரடி' நடவடிக்கைகளால்... '50 நாட்களுக்கு' பின் 'பூஜ்ஜியம்' ஆன எண்ணிக்கை... 'நிம்மதி' அடைந்துள்ள 'நாடு'...
- கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்வு! கோயம்பேடு சந்தையில் இருந்து போனவர்களால்தான் அதிகமான நோய்த்தொற்று!
- 'உயிரிழந்தவர்கள்' பெரும்பாலானோருக்கு இருந்த 'குறைபாடு'... 'இதை' கொடுத்தால் 'வேகமாக' குணமடையலாம்... ஆய்வாளர்கள் 'புதிய' தகவல்...
- "தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!