புதிதாக '30 பேருக்கு' பாதிப்பு... கொரோனா தோன்றிய 'வுஹான்' நகரத்தை... குறைந்த 'அபாயப்பகுதியாக' அறிவித்த சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தான் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய இந்த வைரஸ் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மேற்கண்ட நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா தோன்றிய வுஹான் நகரத்தை சீன அரசு குறைந்த அபாய பகுதியாக அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீனாவில் கடந்த 15 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன் வுஹான் நகரில் உள்ள 13 நிர்வாக பகுதிகளில் 9 நிர்வாக பகுதிகள் குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அங்கு இயல்பு நிலை மீண்டும் திரும்ப ஆரம்பித்து இருக்கிறது. அதே வேளையில் நாடு முழுவதும் 30 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதேபோல அறிகுறியே இல்லாமல் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கு உத்தரவால்... 'சென்னைக்கு' கிடைத்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!
- “இனி 30 நிமிஷத்துல கொரோனா ரிசல்ட்!”.. தயாராகும் 1 லட்சம் ராப்பிட் கொரோனா டெஸ்ட் கிட்”! .. பீலா ராஜேஷ் அதிரடி .. வீடியோ
- 'ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு’... ‘ஊரடங்கு உத்தரவு தொடருமா?’... ‘மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்’!
- 'எம்.பி.-க்கள் நிதியை நிறுத்துவதை ஏற்க முடியாது!'... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!... என்ன காரணம்?
- ‘தமிழகத்தில்’... ‘இந்த 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்’... ‘பாதிக்கப்படாத மாவட்டங்கள் எவை?... விபரங்கள் உள்ளே!
- நாட்டிலேயே 'இங்குதான்' குணமடைந்தவர்கள் அதிகம்... 'உயிரிழப்பு' விகிதம் குறைவு... சுகாதாரத்துறை அதிகாரி 'பகிர்ந்த' காரணம்...
- திருவண்ணாமலையில் குகைக்குள் பதுங்கியிருந்த ‘சீன நபர்’.. ‘வனத்துறையினர் அதிரடி’.. பரபரப்பு சம்பவம்..!
- ‘கொரோனா வைரஸ் பாதிப்பில்‘... ‘ஆண்கள், பெண்கள் எவ்வளவு பேர்’... 'மத்திய சுகாதாரத் துறை விளக்கம்’
- ‘சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாம பாசிடீவ் ரிசல்ட்’.. ‘மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்’.. முதல்வர் அறிவுறுத்தல்..!
- ‘10 மாத குழந்தை, பணிப்பெண் உட்பட கோவையில் குணமான 5 பேர்!’.. ‘மெல்லத் துளிர்விட்ட நம்பிக்கை!’