"உளவு வேலயா பார்க்குறீங்க!?".. தடாலடியாக வந்து... காட்டுமிராண்டித்தனமாக மனித உயிர்களை வேட்டையாடிய கொடூரம்!.. 59 பேர் பலி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நைஜீரியா கிராமத்தில் போகாஹரம் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 59 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

Advertising
Advertising

நைஜீரியா நாட்டில் மத அடிப்படையிலான 'போகோ ஹரம்' பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இவர்களது அடிப்படை நோக்கம், அங்கு மத சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும். தலைமையோ, ஒழுங்கான கட்டமைப்போ இந்த பயங்கரவாதிகளுக்கு இல்லை என்றாலும், அவ்வப்போது வன்முறை செயல்களை நடத்தி கதி கலங்க வைக்கிறார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மதியம் போர்னோ மாகாணத்தில் உள்ள பதுமோ கொலோராம் என்ற கிராமத்துக்கு ஏராளமான போகோ ஹரம் பயங்கரவாதிகள் வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் சென்று திபுதிபுவென இறங்கினர்.

அவர்கள் கைகளில் ஏ.கே. 47 துப்பாக்கிக்ள் இருந்தன. அவர்களைக் கண்டதும் அங்குள்ள மக்கள் கதிகலங்கிப்போனார்கள.

அந்த கிராம மக்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களை ரத்த வெள்ளத்தில் சாய்த்தனர். அவர்கள் அலறித்துடித்தனர். அந்த கிராமமே போர்க்களம் போல மாறிப்போனது.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து 1,200 கால்நடைகளையும், ஒட்டகங்களையும் பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர்.

அவர்கள் ஈவு இரக்கமின்றி, காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 59 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை சிவிலியன் கூட்டு பணிக்குழு உறுப்பினர் ஒருவரும், படை வீரர் ஒருவரும் உறுதி செய்தனர்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், போகோஹரம் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை அளித்ததாக சந்தேகப்பட்டுதான் இந்த கொடூர தாக்குதல்களை அவர்கள் நடத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி கூட்டு பணிக்குழு உறுப்பினர் கச்சல்லா பூமு கூறும்போது, "இந்த கொடிய செயலை நாங்கள் பார்த்த இந்த நாள் ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். இந்த ஊர் மக்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தாக்குதல்களை தடுத்தும் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை பயங்கரவாதிகள், பெருங்கூட்டத்துடன் வந்து இந்த கொடிய தாக்குதல்களை நடத்தி சென்றிருக்கிறார்கள்" என குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் நடந்த கிராமமே பெருத்த சோகத்தில் மூழ்கி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்