சாலை ஓரம்.. வாலிபருக்கு நேர்ந்த துயரம்.. "சுத்தி இருந்தவங்க வேடிக்கை தான் பாத்துட்டு இருந்தாங்க.." உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு, இத்தாலியில் வைத்து நடைபெற்ற சம்பவம், உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு.." இரவு நேரம், அறைக்குள் கேட்ட பயங்கர சத்தம்.. சென்னையை அதிர வைத்த 'சம்பவம்'!!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் Alika Ogorchukwu. இவர் சொந்த நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து இத்தாலியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து ஒன்றின் காரணமாக, Alika ஊன்று கோல் ஒன்றை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கித்ன்றது.

இதன் காரணமாக, தான் ஏற்கனவே வேலை பார்த்து வந்த இடத்தில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தெரு ஓரத்தில் தனியாக கடை ஒன்றையும் நடத்தி வியாபாரம் செய்து வந்துள்ளார் Alika. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், அவருக்கும் கடும் துயரம் ஒன்று நேர்ந்துள்ளது. அங்கே தனது வியாபாரம் தொடர்பாக, அவ்வழியே சென்ற இத்தாலியர் ஒருவருடன் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால்,  Alika-வின் ஊன்று கோலை தட்டி விட்டு, அவரையும் கீழே தள்ளி அவரையும் அந்த நபர் கடுமையாக தாக்கத் தொடங்கி உள்ளார். இதனால், அங்கு சுற்றி இருந்த மக்கள் மத்தியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், சுற்றி இருந்தவர்கள் வீடியோக்களை எடுத்தார்களே தவிர, அந்த தாக்குதலை தடுக்க முயற்சி மேற்கொள்ளவில்லை.

தொடர்ந்து, அந்த நபரும் ஊனமுற்ற Alika-வை கடுமையாக தாக்கிய நிலையில், கடைசியில் அந்த நபர் உயிரிழந்து போனதாக கூறப்படுகிறது. Alikaவின் செல் போனை எடுத்துக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், சுற்றி இருந்தவர்கள் வீடியோவை எடுத்ததால், இது தொடர்பான நிகழ்வு இணையத்தில் அதிகம் வைரலாகி, கடும் அதிர்வலைகளை உலக அளவில் ஏற்படுத்தி உள்ளது.

ஒருவரை தாக்கும் போது, வீடியோக்களை சுற்றி இருந்தவர்கள் எடுத்த போதும், யாரும் சண்டையை தடுக்க முயலவில்லை என்பது பற்றி விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், இத்தாலியுள்ள பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். Alikaவின் மனைவியும் தனது கணவரின் மறைவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் போராடி வருகிறார்.

இதனிடையே, ஊனமுற்ற Alika-வை தாக்கிய நபர் யார் என்பது அடையாளம் காணப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Ferlazzo என்ற 32 வயது நபர் இதற்கான காரணம் என போலீசார் அடையாளம் கண்டு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Also Read | நண்பர்களை டின்னருக்கு அழைத்த தம்பதி.. "நைட்டு வீட்டுக்கு வந்து பாத்தப்போ 2 பேரையும் காணோம்.." கடைசியில் காத்திருந்த 'பயங்கரம்'!!

ATTACKED, NIGERIA, NIGERIA MAN, ITALY VIDEO, NIGERIA MAN ATTACKED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்