அடுத்த '10 ஆண்டுகளில்' ஏற்படப்போகும் 'மிகப்பெரிய பாதிப்பு...' '15 கோடி மக்கள் பாதிக்க வாய்ப்பு...' 'தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச ஆய்வு நிறுவனமான தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் நடத்திய ஆய்வில், 2030ம் ஆண்டு முடிவில் ஆண்டுக்கு 14.7 கோடி பேர் ஆறுகள் மற்றும் கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தால் நகரங்களுக்கு ஏற்படும் சேதம் 712 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும், மொத்தம் 221 மில்லியன் மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் (WRI) கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. தற்போது சேதங்களின் அளவு அதிகரிப்பதை உண்மையில் காண முடிகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் இருந்து மோசமான வெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும், குறிப்பாக வங்கதேசம், வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா மற்றும் சீனாவில் உள்ள அதிக மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் கடலோர வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற கடலோர வெள்ளத்தால் இழக்க நேரிடும் நாடுகளில் சீனா, இந்தோனேஷியா வரிசையில் அமெரிக்கா 3வது இடம்பிடித்துள்ளது என்றும், லூசியானா, மாசசூசெட்ஸ் மற்றும் புளோரிடா ஆகிய மூன்று மாகாணங்களில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உதவி செய்வதை நிறுத்திய அமெரிக்கா’... ‘கை கொடுக்க முன்வந்த சீனா’... 'சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்’!
- ‘ஒட்டுமொத்த மனிகுலத்துக்கும் பொதுவான எதிரி அது’... ‘ஆனால், நீங்க பண்றது துஷ்பிரயோகம்’... ‘சீறிப் பாய்ந்த வெளியுறவுத் துறை’!
- "மிஸ்டர் டிரம்ப், நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க"... 'WHO'வின் பேச்சைக் கேட்காமல்... தனி 'டிராக்'கில் பயணிக்கும் அமெரிக்க 'அதிபர்'!
- "உலகமே ஆடிப்போயி கெடக்கு"... "கொரோனா இன்னும் உக்கிரமா அடிக்கும்"... உலக நாடுகளை எச்சரிக்கும் 'WHO'!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- கடந்த 'ஜனவரியிலேயே' வாங்கி 'பதுக்கி விட்டது சீனா...' தேவையைவிட '18 மடங்கு' வாங்கிக் 'குவித்தது'... 'இப்போது சீனா வைப்பது தான் விலை...'
- ''இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை...'' ''உயிரிழப்புகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது...'' 'போற்றிய நாடே தூற்றிய அவலம்...'
- ‘கொரோனாவுக்கு இடையே’... ‘சீன எல்லையில்’... ‘அமெரிக்காவின் நடவடிக்கையால்’... ‘அதிகரிக்கும் பதற்றம்’!
- "ஊரடங்கை தளர்த்தாதீர்கள்..." "குளிர்காலத்தில் 2வது அலை வீசக்கூடும்..." "விளைவுகள் மோசமாக இருக்கும்..." 'அமெரிக்காவை' எச்சரிக்கும் 'மருத்துவர்கள்...'
- 'கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு...' 'அமெரிக்கா' கேட்கும் மலைக்க வைக்கும் 'இழப்பீடு'...