பிரபல ‘டேட்டிங்’ ஆப்பில் அறிமுகமானவரை... ‘நம்பி’ சென்ற பெண்ணுக்கு ‘பிறந்தநாளன்று’ நேர்ந்த கொடூரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூசிலாந்தில் டிண்டர் செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த கிரேஸ் மிலன் (22) என்ற இளம்பெண் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டர் மூலம் அறிமுகமான இளைஞர் ஒருவரை நேரில் சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருடன் வெளியே சென்ற மிலன், பின்னர் அவருடைய வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

இதையடுத்து மர்மமான முறையில் மிலன் உயிரிழக்க, முதலில் தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறிய அந்த இளைஞர் பின்னர் இருவரும் தனிமையில் இருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு மிலன் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். மிலனின் மர்ம மரணத்திற்கான காரணமாக இளைஞர் கூறியது நம்பும்படியாக இல்லாததால் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள ஆக்லேண்ட் நீதிமன்ற நீதிபதி பெண்ணின் மரணத்திற்கு காரணமான அந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து  உத்தரவிட்டுள்ளார்.

CRIME, MURDER, NEWZEALAND, TINDER, GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்