ஏலத்தில் சூட்கேஸ் வாங்கிய குடும்பம்.. "வீட்டுக்கு வந்து தொறந்து பாத்ததும்.." எல்லாரும் ஒரு நிமிஷம் நடுங்கி போய்ட்டாங்க!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஏலத்தில் விடப்பட்ட சூட்கேஸ் ஒன்றை குடும்பத்தினர் வாங்கிச் சென்ற பிறகு, வீட்டில் சென்று திறந்து பார்த்த நிலையில், கடும் அதிர்ச்சி ஒன்று அவர்களுக்கு காத்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "வருசத்துக்கு இப்ப 20 மில்லியன் ஆளுங்க வராங்க, ஆனா ஒரு காலத்துல.." மர்மங்கள் சூழ்ந்த மரணத்தீவு.. நடுங்க வைக்கும் வரலாறு!!

நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரமான ஆக்லாந்து பகுதியில், சமீபத்தில் ஏலம் ஒன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அப்போது, ஸ்டோரேஜ் யூனிட் விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஏலம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், ஒரு குடும்பத்தினர் அந்த மையத்தில் இருந்து சில சூட்கேஸ்களை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு சென்றதும் தாங்கள் ஏலத்தில் வாங்கி வந்த சூட்கேஸ்களை அந்த குடும்பத்தினர் திறந்து பார்த்துள்ளனர். ஏலத்தில் வாங்கி வந்த சூட்கேஸிற்குள் இருந்த பொருளைக் கண்டு ஒரு நிமிடம் அந்த குடும்பத்தினர் அனைவரும் நடுநடுங்கி போயினர். இதற்கு காரணம், அவர்கள் வாங்கி வந்த சூட்கேஸ்களுக்குள் சிதைந்த நிலையில் மனிதர்களின் உடல் உறுப்புகள் இருந்தது தான் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

உடனடியாக இந்த சம்பவம் பற்றி, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஏலத்தில் சூட்கேஸ் வாங்கி சென்ற குடும்பத்தினர் மீது சந்தேகம் இல்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், எண்ணிக்கையில் அடங்காத சிதைந்த நிலையில் மனிதர்களின் உடல் உறுப்புகள் இருந்தது தான் போலீசாரையும் அதிர வைத்துள்ளது.

சூட்கேஸில் இருந்த உடல்கள் யாருடையது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் போலீசாருக்கு முன்னுரிமையான ஒன்றாக உள்ளது. அது யாருடையது என்பதை அடையாளம் கண்டால் தான், போலீசாரால் இதற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்க அடுத்த கட்டத்திற்கு விசாரணையை எடுத்து செல்ல முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

பிரேத பரிசோதனை நடந்து வரும் நிலையில், தடயவியல் நிபுணர்களும் பலி ஆனவர்கள் எண்ணிக்கையை கண்டுபிடிக்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பயன்படுத்தப்பட்ட பொருட்களை பில் இல்லாமல் ஏலத்தில் விற்பனை செய்வது தான், ஸ்டோரேஜ் யூனிட்டின் பொதுவான நடைமுறையாகும். இந்த சூட்கேஸ் தொடர்பாக, அந்த ஸ்டோரேஜ் யூனிட்டின் உரிமையாளரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட சூட்கேஸுக்குள் சிதைந்த நிலையில் மனிதர்களின் உடல் உறுப்புகள் இருந்த சம்பவம், ஆக்லாந்து பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "2022'ல இப்டி எல்லாம் நடக்கும்.." துல்லியமா கணிச்ச இளம்பெண்??.. "இப்ப அதையே ஒரு பிசினஸா மாத்திட்டாங்களாம்.."

POLICE, NEWZEALAND, NEWZEALAND FAMILY, SUTICASE, AUCTION, POLICE INVESTIGATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்