Video : 'யோவ், என்னா மனுஷங்கயா நீங்க'... 'இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தா அந்த அம்மா என்ன பண்ணுவாங்க?'... நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த போது, உலக மக்கள் அனைவரும் தங்களது தொழிலில் கடும் நெருக்கடியை சந்தித்தனர்.

அதிலும் குறிப்பாக, தினசரி மற்றும் கூலி தொழிலாளர்கள் பல மாதங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. அப்படி ஒரு கடினமான சூழ்நிலைக்கு தான் ரோஸா (Rosa) என்ற துப்புரவாளரும் தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக, துப்புரவாளராக பணிபுரிந்து வந்துள்ளார் ரோஸா. கொரோனா தொற்றின் காரணமாக, இவர் அந்த பணியை இழந்துள்ள நிலையில், வறுமையின் காரணமாக ரோசா தனது சகோதரியின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த குடியிருப்பில் வாழ்பவர்கள், இருபது ஆண்டுகளாக அந்த குடியிருப்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் ரோஸாவுக்கு மிகப் பெரிய பரிசைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, ரோசாவை அந்த குடியிருப்பில் அழைத்து வந்த நிலையில், தன்னை சுத்தம் செய்யத் தான் அழைத்திருக்கிறார்கள் என நினைத்து கையில் பக்கெட் மற்றும் சுத்தம் செய்யும் பொருட்களை ரோஸா கொண்டு வந்துள்ளார்.

அதன்பிறகு, குடியிருப்பின் மேற்கூரையில் அமைந்திருக்கும் வீடு ஒன்றை ரோசாவிற்கு சுற்றிக் காட்டிய நிலையில், அங்கிருந்த இருவரும் 'இது இனிமேல் உங்கள் வீடு. உங்கள் குடும்பத்தாரிடம் இனி நீங்கள் இங்கே தங்கிக் கொள்ளலாம்' எனக்கூறி அதன் சாவியை ரோசாவிடம் ஒப்படைத்தனர். இரண்டு ஆண்டுகள் குத்தகைக்காக அந்த வீடு ரோஸாவுக்கு வழங்கப்பட்டது.


 

கொரோனா தொற்றின் காரணமாக, வேலையிழந்து தவித்து வந்த ரோஸா, அவர்களின் பேச்சைக் கேட்டதும் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சியில் உடைந்து போய் ஆனந்தக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார். 'இங்குள்ள அனைவருக்கும் ரோஸாவை மிகவும் பிடிக்கும். அவர் எங்களுக்காக நிறைய செய்துள்ளார். இங்கு பல பேர் அவரது ரசிகர்கள் ஆவர்' என குடியிருப்பில் உள்ளவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

மனதை உருக வைக்கும் இந்த வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்