"Daily பணம் செலவு பண்றது தான் என் வேலையே.." ஒரு நாளைக்கு 40 லட்சம் Pocket Money.. இன்டர்நெட்டை அலற விடும் இளம்பெண்
முகப்பு > செய்திகள் > உலகம்ஒருவரின் வாழ்நாள் கனவு என்பது, தனக்கு பிடித்த வேலையை செய்து, அதில் கிடைக்கும் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, தனக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்பது தான்.
இதற்காக, பல நாட்கள் பாடு பட்டு, தங்களுக்கு விருப்பப்படும் விஷயங்களை நிறைவேற்றி, அதில் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.
ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தினந்தோறும் செய்து வரும் செயல் ஒன்று, நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாம்..
டிக் டாக் மூலம், இணையத்தில் சற்று பிரபலம் ஆனவர் ரோமா அப்டெசிலம் (Roma Abdesselam). நியூயார்க் பகுதியைச் சேர்ந்த இவர், ஒரு நாளுக்கு சுமார் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம்) வரை செலவு செய்கிறார். தனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, சுமார் 40 லட்சம் ரூபாயை பெரும்பாலான நாட்களில், தனது Pocket Money ஆகவும் ரோமா செலவு செய்து வருகிறார்.
Stay at home daughter
இது,தொடர்பாக, பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரோமா வெளியிட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல், தனக்கு "Stay at home daughter" என்ற பெயரை வைத்து, பெற்றோர்களின் பணத்தை தினமும் செலவு செய்வது தான், தனது முழு நேர வேலை என்றும் ரோமா குறிப்பிட்டுள்ளார். அதே போல, மற்றொரு இன்ஸ்டா வீடியோவில், கண் புருவங்களை அழகுபடுத்த, 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய்) செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ரோமா.
தினமும் எழுந்த பிறகு, உடற்பயிற்சி செல்வது, தோழிகளுடன் ஊர் சுற்றுவது, பார், ரெஸ்டாரண்ட், அழகு நிலையங்கள் செல்வது, உடைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை வாங்குவது என தினமும் பல லட்ச ரூபாயை செலவு செய்து வருகிறார். இதில், பல நாட்கள் அவர் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வருகிறார்.
மேலும், ஒரு நாள் அணிந்த உடையை மறுமுறை பயன்படுத்தும் பழக்கம் இல்லாத ரோமா, தனது பெற்றோர்கள் செய்யும் வேலை என்ன என்பது பற்றி குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. தனக்கான ஆடம்பர செலவு ஒரு பக்கம் இருக்க, மற்ற நாடுகளிலுள்ள கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் நன்கொடை செய்தும் வருகிறார்.
இப்படி ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதையே வேலையாக கொண்டுள்ள இளம் பெண் குறித்து, நெட்டிசன்கள் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "இப்படி யாராவது போன் பண்ணா அதை நம்பிடாதீங்க".. புதுசாக வலை விரிக்கும் கும்பல்.. சென்னை கமிஷனர் எச்சரிக்கை..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாய், மகள் மர்ம மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்.. தென்னந்தோப்பில் கிடைத்த ‘மங்கி குல்லா’.. தீவிரமடையும் விசாரணை..!
- “நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!
- வாட்சாப்பில் லட்ச கணக்கில் பணம் கேட்ட மகள்.. அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "குட்நைட்" மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
- "எங்க குழந்தைக்கு சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்".. கோவை பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..!
- உயிரிழந்த தந்தை.. மனசுல வேதனை.. ஆனாலும் தளராமல் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. கல்விக் கனவுக்காக நெகிழ வைத்த மாணவி
- சாலை ஓரத்தில் பூ விற்றவர் மகள்.. இப்போ கலிஃபோர்னியா University-ல.. நெகிழ்ச்சி சாதனை
- தோப்பில் மர்மமாக உயிரிழந்த அப்பா.. கைதான 3-வது மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
- 30 வருசமா ஆண் வேடமிட்டு வாழ்ந்து வரும் பெண்.. பின்னணியில் உள்ள உருக்கமான காரணம்..!
- பாவாடையில் தெறி நடனம்.. நியூயார்க் நகரத்தை அலறவிட்ட இந்திய இளைஞர்.. வைரல் வீடியோ..!
- திருமண செலவுக்கான தொகையை தரவேண்டும்.. நீதிமன்றத்திற்கு சென்ற மகள்.. கோர்ட் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!