நிலைகுலைந்த நியூயார்க் நகரம்!... 'புல்லட் ரயில்' வேகத்தில் வைரஸ் பரவுகிறது!... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் 25,000 த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, அதில் 210 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. அந்த நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,000 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 700ஐ நெருங்கியுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பிரபல நகரமான நியூயார்க்கில் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகும் 2 பேரில் ஒருவர் நியூயார்க்கை சேர்ந்தவராக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

இதுகுறித்து பேசிய நியூயார்க் நகரின் ஆளுநர், அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நியூயார்க் நகரத்தில் உள்ளனர். தற்போது வரை 25,665 பேர் நியூயார்க் நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் 'புல்லட் ரயில்' வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை இப்படியே தொடருமானால், நியூயார்க் நகருக்கு மட்டும் 1,40,000 படுக்கைகள் தேவைப்படும் அவலம் உருவாகும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், வருகிற நாட்களில் நியூயார்க் நகரில் பலியாவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கூறும்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் நியூயார்க் நகரம் இந்த தொற்றுநோய் தாக்குதலின் மையப்பகுதியாக உள்ளது” என்றார்.

 

USA, NEWYORK, CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்