'வார்டிலிருந்து மாயமான மருத்துவர்'... 'உடை மாற்றும் அறையின் சுவிட்சை போட்ட செவிலியர்'... உங்கள காணும்ன்னு தேடுனா என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்பணியின்போது திடீரென காணாமல் போன மருத்துவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள, Fairfield மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் Dr. Raisah Sawati. இளம் மருத்துவரான இவர் பணியின் போது ஒரு நாள் திடீரென மாயமாகியுள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பத் தயாராக இருந்தார்.
அந்த நேரம் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் Raisah Sawatiயின் கையெழுத்து தேவைப்பட்டதால் அந்த நோயாளி காத்துக் கொண்டிருந்தார். இதனால் மருத்துவரைக் காணாததால், ஒலிபெருக்கி மூலம் நான்கு முறை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் Raisah வராமல் இருந்துள்ளார். இதனால் செவிலியர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
பின்னர் செவிலியர் ஒருவர் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது மருத்துவர் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் மட்டும் அங்கு இருந்துள்ளது. இதனால் பதற்றமான செவிலியர்கள் மருத்துவர் Raisah Sawatiயை மருத்துவமனையின் மற்ற இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்கள். ஆனால் எந்த பயனும் இல்லை.
இந்நிலையில் செவிலியர் ஒருவர் உடை மாற்றுவதற்காக உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் Raisah அந்த அறையின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒரு பெஞ்சில் படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கப் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த Raisahயின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே Raisah இப்படித் தூங்குவது முதல் முறையல்ல என்றும், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவர் ஒருவருக்கு ஆடிட் வேலைக்கு உதவச் செல்வதாகக் கூறிவிட்டு இருட்டறை ஒன்றில் படுத்துத் தூங்கிவிட்டது தெரியவந்தது.
மேலும், குழந்தை ஒன்றிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தான்தான் அதைக் காப்பாற்றியதாகப் பொய் கூறியது, சுவாசக்கோளாறால் உயிரிழந்த நோயாளி ஒருவரைக் காப்பாற்றத் தவறியது, மற்றும் தனது கல்வித்தகுதி குறித்துப் பொய் கூறியது எனப் பல குற்றங்களை அவர் செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே எனக்கு அன்று வயிற்று வலி இருந்ததன் காரணமாகவே தூங்கச் சென்றதாகவும், நான் பணியில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவர் எனவும் Raisah விளக்கமளித்துள்ளார். மேலும் தன் மீதான நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஹேய் கொரோனா...! 'வாக்சின் போட்டும் மூணு தடவ வந்துட்ட...' 'நாலாவது தடவலாம் உன்ன வர விடமாட்டேன்...' - நம்பிக்கையுடன் கூறிய டாக்டர்...!
- ‘என்ன சத்தம் அது’!.. பைக் சீட்டை கழற்றிய டாக்டர்.. ‘இனி கொஞ்ச நாளைக்கு வண்டியை எடுக்கக் கூடாது’.. நெகிழ வைத்த ‘மதுரைக்காரர்’-ன் மனித நேயம்..!
- 'நீட் எக்ஸாம்' தேதி அறிவிச்சிட்டாங்க...! எந்த 'வெப்சைட்ல' போய் 'அப்ளை' பண்ணனும்...? - முழு விவரங்கள் உள்ளே...!
- '12 வயசுல ஆசைப்பட்டேன்...' ஆனா 67 வயசுல தான் 'என் லட்சியம்' நிறைவேறியிருக்கு...! - 50 வருசமா உள்ளுக்குள்ள எரிந்துக்கொண்டிருந்த கனவு...!
- 'கொரோனா வார்டுல நைட் டூட்டி முடிச்சிட்டு...' 'காலையில வீட்டுக்கு கிளம்ப...' - 'கார்' எடுக்க வந்த 'டாக்டருக்கு' காத்திருந்த அதிர்ச்சி...!
- 'கொரோனா டெஸ்ட் எடுக்க வந்தது ஒரு குத்தமா'?... 'வாலு குழந்தையிடம் சிக்கிய டாக்டர்'... 'கடைசியா போட்டுச்சு பாருங்க ஒரு ஸ்டெப்'... வைரலாகும் வீடியோ!
- என் மனசுக்குள்ள திரும்பத்திரும்ப 'அந்த கேள்வி' வந்துட்டே இருந்துச்சு...! இந்த மாதிரி நேரத்துல 'இதெல்லாம்' அவசியம் தானா...? 'டேட் வரைக்கும் பிக்ஸ் பண்ணிட்டாங்க...' - இளம் டாக்டர் எடுத்த அதிரடி முடிவு...!
- ‘8 மாத கர்ப்பம்’!.. உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ‘நிறைமாத’ இளம் மருத்துவர்.. பரிதாபமாக பலியான சோகம்.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!
- 'இந்த ஆடைக்குள் இருக்கும் வேதனை'... 'கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்'... 'உடைந்து நொறுங்கி போன நெட்டிசன்கள்'... வைரலாகும் புகைப்படம்!
- 'டாக்டர் எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்'... 'பேசிக்கொண்டிருக்கும் போதே பளார் விட்ட பெண் செவிலியர்'... வைரலாகும் வீடியோ!