1800 வருஷத்துக்கு முன்னாடி உலகத்தையே ஸ்தம்பிக்க வச்ச எரிமலை .. மறுபடியும் எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்கள்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்து நாட்டில் உள்ள டௌபோ எரிமலை (Taupō volcano) அமைந்திருக்கும் பகுதியை சுற்றி சிறிய அளவிலான தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
எரிமலை
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுகளில் அமைந்துள்ளது இந்த டௌபோ எரிமலை. இது கடைசியாக 1800 வருடங்களுக்கு முன்னர் வெடித்துச் சிதறியது. பூமியில் உள்ள மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான இது வெடித்தது. உலக அளவில் பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில் உலகம் சந்தித்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு அதுதான் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த எரிமலை வெடித்த சமயத்தில் வடக்கு தீவு முழுவதும் ஒரு செமீ தடிமனுக்கு சாம்பல் மூடிக்கிடந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எச்சரிக்கை
இந்நிலையில், இந்த எரிமலையில் மீண்டும் வெடிப்பு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். இந்த ஆண்டு மே மாதம் முதல் நியூசிலாந்தின் வடக்கு தீவின் மையத்தில் அமைந்துள்ள Taupō ஏரியில் கிட்டத்தட்ட 700 சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக ஜியோநெட் என்ற புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அருகே தான் இந்த எரிமலையும் அமைந்திருக்கிறது. இதுவே ஆராய்ச்சியாளர்களின் கவலைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இருப்பினும், அவற்றில் பல நிலத்தில் உணர முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தபோதிலும், செப்டம்பர் 10 அன்று 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் நிலநடுக்கங்கள் தொடரலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியே இருக்கும் எரிமலைக்குழம்பு மற்றும் வெப்ப நீர் ஆகியவற்றின் இயக்கம் காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இடத்தை சுற்றிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
27 முறை
வழக்கமாக இந்த எரிமலை வெடிப்பு எச்சரிக்கை அளவுகள் 0 - 5 வரையில் இருக்கும். தற்போது 1 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றுள் எந்த அளவில் எரிமலை வெடிக்கும் என்பது கணிக்கமுடியாத ஒன்று என்கிறார்கள் நிபுணர்கள். 1800 வருடங்களுக்கு முன்னர் வெடித்துச் சிதறிய இந்த எரிமலை அதற்கு முன்னரும் ஒருமுறை பயங்கரமாக வெடித்திருக்கிறது. 25,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எரிமலை வெடித்தபோது தான் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அப்பகுதியே தற்போது ஏரியாக உருவெடுத்திருக்கிறது. அதன்பிறகு 27 முறை வெடித்தாலும் அவை அனைத்தும் சிறிய அளவுகளில் நிகழ்ந்திருக்கிறது. இந்நிலையில், மீண்டும் இந்த எரிமலை வெடிக்கலாம் என ஆராச்சியாளர்கள் தெரிவித்திருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மற்ற செய்திகள்
"இனிமே மன்கட் இல்ல, அதுக்கு பதிலா".. ICC கொண்டு வந்த புதிய ரூல்ஸ்.. "ஒவ்வொண்ணும் Gun மாதிரி இருக்கே"
தொடர்புடைய செய்திகள்
- வருஷத்துல எத்தன நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கங்க..வாயை பிளந்த ஊழியர்கள்.. அருமையான கம்பெனியா இருக்கும்போலயே..!
- மனித வரலாற்றிலேயே இந்த மீன கொஞ்ச பேர் தான் பாத்திருப்பாங்க.. கரை ஒதுங்கிய ராட்சச பீஸ்ட் மீன்.. தீயாய் பரவும் வீடியோ..!
- ஆப்கானிஸ்தானிடம் அகதியாக அடைக்கலம் கேட்கும் நியூசிலாந்து கர்ப்பிணி பெண் ரிப்போர்டர்.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்
- கடைசிப்போட்டி.. மைதானத்துலயே கண்கலங்கிய ராஸ் டெய்லர் - பரவும் நெகிழ்ச்சி வீடியோ..!
- சிக்ஸரே அடிக்கல.. ஆனா ஒரே பந்துல 7 ரன்... டெஸ்ட் போட்டியில் மிரள வெச்சிருச்சுப்பா நியூசிலாந்து..!
- கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான DRS ரிவ்யூ இதுதான் - வங்க தேசத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
- '6 மணி செய்தி' வாசிப்பாளராக பணியில் சேர்ந்த பெண்! ஒரே நாளில் உலக ஃபேமஸ்.. இதுதான் காரணம்!!!
- என்ன கொடுமை அஜாஸ் படேல்! 10 விக்கெட் எடுத்தும் பயனில்லையே ராஜா!
- இப்படி அவசரப்பட்டு 'கைய' உடைச்சிட்டீங்களே...! கொஞ்சம் 'கோவத்த' கண்ட்ரோல் பண்ணுங்க பாஸ்...' கடைசி நேரத்துல 'இப்படியா' ஆகணும்...? - நியூசிலாந்து அணிக்கு இது பெரிய அடி...!
- மூணு 'இளம்' வீரர்களுக்கு வாய்ப்பு...! யாரெல்லாம் வெளிய...? 'நியூசிலாந்து' அணியுடனான போட்டிக்கு 'இந்திய' அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ...!