நியூசிலாந்தில் தனது ஆராய்ச்சிக்கு உதவ வேண்டுமென 11 வயது சிறுமி ஒருவர் பிரதமர் ஜெசிண்டா அர்டர்னுக்கு ஒரு கடிதத்துடன் லஞ்சமாக பணமும் சேர்த்து அனுப்பியுள்ளார்.
ஜெசிண்டா அர்டர்னின் அலுவலகத்திற்கு விக்டோரியா என்ற அந்த சிறுமி அனுப்பிய கடிதத்தில், “தனக்கு டிராகன் பயிற்சியாளராக ஆசை எனவும், அதற்கு டெலிகைனடிக் எனும் தொலை இயக்கவியல் அதிகாரம் வேண்டும். அரசாங்கம் டிராகன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என எழுதியுள்ளார். இந்த கடிதத்துடன் அதற்கு லஞ்சமாக இந்திய ரூபாய் மதிப்பில் 232 ரூபாயும் அனுப்பியுள்ளார்.
சிறுமி அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பிய ஜெசிண்டா, “டிராகன் பற்றிய உங்களது ஆலோசனைகளைக் கேட்க ஆர்வமாக உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக இது தொடர்பாக எந்த ஆய்வையும் நாம் இப்போது செய்யவில்லை. அதனால் உங்கள் பணத்தையும் திருப்பி அனுப்புகிறேன். டிராகன் பற்றிய உங்கள் ஆராய்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நானும் இனி டிராகன் குறித்து தொடர்ந்து கவனிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல ஜெசிண்டா இதற்கு முன்பே ஒரு முறை துப்பாக்கிச் சூட்டின்போதும், குழந்தை பெற்றிருந்த போதும் சிறுவர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிறுமியை பள்ளிப் பாடம் எழுத வைத்து, பியானோ வாசிக்க வைக்கும் வளர்ப்பு நாய்..!
- இளம்பெண்ணை கத்தியால் குத்தி இளைஞர் கொன்ற வழக்கு: விருத்தாசலத்தில் வலுக்கும் மாணவர் போராட்டம்!
- ”இந்த பொன்னுகிட்ட என்னமோ இருக்கு”....பறவையை வைத்து சிறுமி செய்யும் செயல்! வைரல் வீடியோ
- பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்: மாயமான கல்லூரி மாணவி கொலை.. பதறவைக்கும் சம்பவம்!
- ‘கோயிலுக்கு போயிட்டு இருந்தேன்’..‘அன்பா பேசுனாங்க’.. ஆட்டோ டிரைவர்களின் வெறிச்செயல்.. 16 வயது சிறுமியின் பதற வைத்த வாக்குமூலம்!
- ‘தந்தையால் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை’.. கணவருடன் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு!
- ‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்!
- 16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்!
- முதல்முறையாக குடும்பத்தை சேர்த்து வைத்த டிக்டாக்.. எப்படி தெரியுமா?