‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு’.. அறிவித்த பிரதமர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமாகி வீடு திரும்பியதாக நியூஸிலாந்து நாடு தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

நியூஸிலாந்து நாட்டில் இதுவரை மொத்தமாக 1,504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை காட்டிலும், நோய் பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதை நோக்கமாக கொண்டு அந்நாட்டில் 7 வார காலம் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் கடந்த 17 நாட்களாக யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனால் தற்போது கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்