வருஷத்துல எத்தன நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கங்க..வாயை பிளந்த ஊழியர்கள்.. அருமையான கம்பெனியா இருக்கும்போலயே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு அன்லிமிட்டட் விடுமுறைகளை அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. 

Advertising
>
Advertising

Also Read |  சவப்பெட்டிக்குள்ள கேட்ட முனகல் சத்தம்..அடக்கம் செய்ய போறப்போ நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தெறிச்சு ஓடிய மக்கள்..!

விடுமுறை

பொதுவாகவே பல அலுவலகங்களில் விடுமுறை பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்றவேண்டிவரும். ஏகப்பட்ட விதிமுறைகள், கெடுபிடிகள், லீவ் எடுக்கும் காரணம், அதற்காக வார விடுமுறைகளில் வேலை செய்வது என ஒவ்வொரு ஊழியரும் விடுமுறைக்காக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அன்லிமிட்டட் விடுமுறைகளை அளிக்க இருப்பதாக அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

அன்லிமிட்டட் விடுமுறை

இந்த திட்டத்தின் மூலமாக வருடத்தில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். நியூசிலாந்து நாட்டின் ஆக்லந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆக்சன் ஸ்டெப் என்னும் ஐடி நிறுவனம் தான் இந்த வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய இந்த நிறுவனத்தின் பொறியியல் பிரிவு துணைத் தலைவர் ஸ்டீவ்," ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் மீது எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. 'நான் மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு போகலாமா' போன்ற சில கேள்விகள் எங்களிடம் கேட்கப்பட்டன. ஆனால் நாங்கள் எங்கள் ஊழியர்களுடன் அனைத்து கேள்விகளையும் தீர்த்து, தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்த முடிந்தது" என்றார்.

மேலும் இது நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டம் எனக் கூறிய ஸ்டீவ் ,"இந்தத் திட்டத்தின்படி ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். பணிபுரியும் நாட்களில் அவர்களுக்கான கடமைகளை சரியாக செய்வார்கள் என நாங்கள் நம்புகிறோம். இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்" என்றார்.

முதல் முறை அல்ல

இதுபோன்று வரம்பற்ற விடுமுறைகளை அளிக்கும் திட்டத்தினை முதல்முறையாக அமல்படுத்தும் நிறுவனம் ஆக்ஷன்ஸ்டெப் அல்ல. ஏற்கனவே Netflix மற்றும் LinkedIn போன்ற நிறுவனங்கள் முன்னர் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தன. ஆனால், இந்த பெரும்பாலான பணியாளர்கள் நினைத்ததை விட குறைவான விடுமுறைகளையே எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றி ஸ்டீவ் பேசுகையில்,"உலகெங்கிலும் உள்ள எங்கள் அலுவலகங்கள் அனைத்திற்கும் குறைந்தபட்சத் தேவையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் இந்த இலக்குகளை நாங்கள் கண்காணிக்க முடியும். மேலும், ஊழியர்கள் குறைந்தபட்ச விடுமுறைகளை எடுப்பதை உறுதிசெய்ய முடியும்" என்றார்.

தங்களது ஊழியர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் இருந்தால் எங்களால் எளிதில் வளர முடியும் எனவும் அதற்கான முதல்படி தான் இந்த திட்டம் என்கிறார் ஸ்டீவ். நியூசிலாந்தை சேர்ந்த ஆக்ஷன்ஸ்டெப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வரைமுறையற்ற விடுமுறைகளை அளிக்க இருப்பதாக அறிவித்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

NEW ZEALAND, NEW ZEALAND COMPANY, UNLIMITED LEAVES, EMPLOYEES, ஊழியர்கள், விடுமுறை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்