செவ்வாய் கிரகத்துல 'அந்த பழம்' இருக்கு...! என்னங்க 'நிஜமா' தான் சொல்றீங்களா...? 'வெளியான பரபரப்பு நியூஸ்...' - விளக்கம் அளித்த பிரபல செய்தி நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நம்முடைய பேரண்டத்தின் ஒரு கோளாக இருப்பது செவ்வாய் கிரகம். செந்நிற கோளாக இருக்கும் இந்த செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க உட்பட பல சர்வதேச நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி மண்டையை குழம்ப வைத்தது என்றே சொல்லவேண்டும்.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், செவ்வாய் கிரகத்தில் தர்பூசணி பழங்கள் காணப்பட்டதாகவும், அதை போலீசார் உறுதி செய்ததாகவும் தங்கள் இணையதளத்தில் செய்தி வெளியிட்டது. இதனை படித்த வாசகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

ஆனால் செய்தி வெளிவந்த சில நிமிடங்களில் அந்த கட்டுரை நீக்கப்பட்டதோடு, அது உண்மை இல்லை, தவறுதலாக வெளியாகிவிட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

தவறு என்பது அனைத்து தளங்களிலும் நடக்கும் சாதாரண விஷயம் தான். ஆனால் நியூயார்க் டைம்ஸ்ஸின் இந்த சம்பவம் இது நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை பெற்று விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்