"நான் டிரஸ் தான்யா ஆர்டர் பண்ணேன்... இதெல்லாம் கூடவா அனுப்புவாங்க...?” - ‘ஆசை ஆசையாக திறந்து பாத்தவருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக இன்றைய காலகட்டங்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி கொள்வது என்பது தற்போது அதிகரித்துள்ளது. அதுவும் கொரோனா பேரிடர் காலம் என்பதால், இத்தகைய காலகட்டங்களில் மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்யத் தயங்குவதால், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நியூயார்க்கை சேர்ந்த பெஞ்சமின் ஸ்மிதி என்பவர் நைக்கி (Nike) மூலம் சில உடைகளை ஆர்டர் செய்துள்ளார். வீட்டிற்கு வந்த பெட்டியை திறந்து பார்த்த பெஞ்சமினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெட்டிக்குள், தான் ஆர்டர் செய்து உடைக்குள்ளே சில புழுக்கள் நெளிந்த வண்ணம் இருந்தன. இதனைக் கண்ட அவர் திகைத்து போன நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெஞ்சமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
'மிகவும் ஆசையுடன் டெலிவரி பாக்ஸை திறந்து பார்த்த போது, அதில் புழுக்கள் சில ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றது. முழுவதும் சிறந்த முறையில் பேக்கிங் செய்யப்பட்டுள்ளதால் ஷிப்பிங் சமயத்தின் போது, அந்த புழுக்கள் உள்ளே சென்றிருக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக அதற்கு முன்னரே அவை உள்ளே இருந்திருக்க வேண்டும். மொத்தமாக 25 -30 புழுக்கள் இருந்தது' என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதுகுறித்து நைக்கி நிறுவனத்தின் சார்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். பெட்டிக்குள் புழுக்கள் இருந்தது தொடர்பான அவரது பதிவு நெட்டிசன்களிடையே வைரலானதை தொடர்ந்து, அவரது பணத்தையும், அவர் ஆர்டர் செய்த பொருளையும் திருப்பி அனுப்புவதாக நைக்கி நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் அதே பதிவில் பின்னர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கறுப்பினத்தவர் மரணத்துக்காக மண்டியிட்டது அருவருப்பானது!.. வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்!" - மன்னிப்பு கேட்டு அதிரவைத்த போலீஸ்காரர்!
- போராட்டத்தால 'ஏரியா' ஃபுல்லா குப்பையா கெடக்கு... 10 மணி நேரம், ஒன் மேன் ஆர்மியாக... அசத்திய 18 வயது இளைஞர்!
- ‘டிரம்ப் மரண கடிகாரம்’!.. அமெரிக்காவை அதிரவைத்த பிரபல ‘ஹாலிவுட்’ இயக்குநர்..!
- குழந்தைகளை தாக்கும் 'மர்ம' நோய்... ஐந்து வயது 'சிறுவன்' பலி... 73 குழந்தைகள் பாதிப்பு!
- கொரோனா சூழலுக்கு தகுந்தவாறு திட்டமிடுவது எப்படி?.. 'நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இல்லை!'... அதிரடியாக அறிவித்த அரசு!
- 'கொரோனாவுக்கு புதிய மாத்திரை...' 'கைகொடுக்கும் என விஞ்ஞானிகள் பரிந்துரை...' 'நியூயார்க் நகரில் சோதனை முயற்சி...'
- விலங்குகளையும் அச்சுறுத்தும் கொரோனா!.. 4 புலிகள், 3 சிங்கங்களுக்கு தொற்று உறுதி!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
- வேலையிழப்பின் 'இரண்டாம்' அலை... '2007-09' நிலையே 'மீண்டும்' வரும் 'அபாயம்'... வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'தகவல்'...
- 'கொரோனா' கோரத்தால் கோஸ்ட் சிட்டியான 'நியூயார்க்'... 21ஆம் நூற்றாண்டின் 'ஹிரோஷிமா, நாகசாகி..'. 'நினைவு நகராக' மாறி வரும் 'கனவு நகரம்...'
- அமெரிக்க 'வரலாற்றில்' முதல்முறையாக... '50 மாகாணங்களும்'... அதிபர் 'டிரம்ப்' வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...