VIDEO: 'இடுகாட்டில் இடப்பற்றாக்குறை!... நியூயார்க் நகரம் எடுத்த பதறவைக்கும் முடிவு!... மனதை கலங்கடிக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ராட்சச பள்ளங்கள் தோண்டி அமெரிக்காவில் புதைத்து வருகின்ற காட்சிகள் காண்போரை கலங்கடிக்கச் செய்துள்ளது.

கொரோனா வைரஸால் இதுவரை உலகில் 16,19,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 96,966 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே 3,65,847 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,68,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். 25,928 சிகிச்சையில் பலன் பெற்று வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், இறந்த உடல்களை புதைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க் நகரில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களின் உடல்களை மொத்தமாகப் புதைப்பதற்கு ஹார்ட் தீவில் சவக்குழிகள் தோண்டப்படுகின்றன. ஏராளமான சவப்பெட்டிகளை வைக்கும் வகையில் தோண்டப்படும் அந்தக்குழிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் அடக்கம் செய்ய வசதியில்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தத் தீவில், பெரும்பாலும் சடலங்களைப் புதைப்பவர்கள் சிறைக்கைதிகளாகவே இருப்பார்கள். ஆனால், தற்போது அதிகளவில் சடலங்கள் வருவதால், ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் உடல்கள் புதைக்கப்படுகின்றன. உலகில் வேறு எந்த நாட்டையும்விட அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நியூயார்க் நகரில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துவிட்டன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்