30 வருஷ காத்திருப்பு.. சர்ப்ரைஸ் கொடுத்த வெப் தொலைநோக்கி.. சந்தோஷத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவு துல்லியமாக நெப்டியூன் கிரகத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | மனைவியுடன் தனி அறையில் இருக்க கைதிகளுக்கு அனுமதியா??.. முதல் முறையாக முயற்சி எடுக்கும் மாநிலம்!!

நெப்டியூன்

சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமான நெப்டியூன் மிகுந்த குளிரால் நிரம்பியது. நாசாவின் கூற்றுப்படி, நெப்டியூனில் நண்பகல் என்பது பூமியில் ஒரு மங்கலான அந்தி நேரம் போன்றது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தை விட கனமான தனிமங்களினால் நிரம்பியுள்ள இந்த கிரகம் ராட்சத பனிப்பாறை போல இருக்கிறது. 1846 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகத்தை சுற்றிலும் வளையம் இருப்பது மிகவும் தாமதமாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்தது. வாயேஜர் 2 விண்கலம் 1989 இல் எடுத்த புகைப்படத்தில் நெப்டியூன் கிரகத்தை சுற்றி தூசுக்களால் ஆன, வளையங்கள் இருப்பது தெரிந்தது. ஆனால், அதனை விட தெளிவான புகைப்படம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஜேம்ஸ் வெப்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி) செலவில் உருவாக்கியது நாசா. கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. இது, முன்னர் நாசாவால் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி போல 100 மடங்கு சக்திவாய்ந்தது.

புகைப்படம்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது எடுத்து அனுப்பியுள்ள இந்த புகைப்படத்தில் நெப்டியூன் கிரகத்தின் வெளிப்புற வளையம், அதன் துணைக்கோள்கள் ஆகியவை தெளிவாக தெரிகின்றன. வெப் தொலைநோக்கி நியர்-இன்ஃப்ராரெட் கேமரா (NIRCam) மூலமாக இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறது. மேலும், நெப்டியூன் கிரகத்தின் 14 துணைக்கோள்களின் அமைவும் இந்த புகைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நெப்டியூன் கிரகத்தை ஆய்வு செய்துவரும் ஹெய்டி ஹாம்மல் இதுபற்றி பேசுகையில்,"இந்த மங்கலான, தூசி நிறைந்த வளையத்தை நாங்கள் கடைசியாகப் பார்த்து மூன்று தசாப்தங்களாகிவிட்டன. அகச்சிவப்பு நிறத்தில் அவற்றைப் பார்ப்பது இதுவே முதல் முறை. வெப் தொலைநோக்கியின் மிகவும் நிலையான மற்றும் துல்லியமான படத் தரம், இந்த மங்கலான வளையங்களை நெப்டியூனுக்கு மிக அருகில் கண்டறிய அனுமதிக்கிறது" என்றார்.

Also Read | வீட்டுல இருந்து திடீர்ன்னு காணாம போன நாற்காலி.. "எங்கடா போச்சு'ன்னு தேடுனப்போ".. இளம்பெண்ணுக்கு தலையே சுத்த வெச்ச உண்மை!!

NEW WEBB IMAGE, NEPTUNE RINGS, வெப் தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்