பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு உயிரிழந்த நபர்.. காரணம் அறிய நடந்த ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

 கடந்த சில மாதங்களுக்கு முன், பன்றியின் இதயத்தை தானமாக பெற்று, அறுவை சிகிச்சை செய்த நபர், உயிரிழந்து போன நிலையில், தற்போது இது தொடர்பாக மற்றொரு அதிர்ச்சி தகவல், ஆய்வில் வெளி வந்துள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவின் மேரிலேண்ட் என்னும் பகுதியைச் சேர்ந்த இதய நோயாளியான டேவிட் பென்னட் (வயது 59) என்பவருக்கு கடந்த ஆண்டு இறுதியின் போது, உடல்நிலை மோசமாக, இதய - நுரையீரல் பைபாஸ் இயந்திரத்தின் மூலம் தான் அவர் உயிர் வாழ்ந்தும் வந்துள்ளார்.

அப்படி இருக்கையில், டேவிட்டிற்கு பன்றியின் இதயத்தை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது.

மனிதனுக்கு பன்றியின் இதயம்

இந்த அறுவை சிகிச்சை, கடந்த ஜனவரி மாதம் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஆராய்ச்சியாளர்கள் பலரும் விலங்கின் இதயத்தை மனிதருக்கு பொருத்திய சிகிச்சை வெற்றி பெற்றதால் பெருமிதம் கொண்டனர். பல்வேறு ஆய்வுகளை முடித்த பிறகு, பன்றியின் இதயம் மனிதர் ஒருவருக்கு பொருத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென கடந்த மார்ச் மாதத்தில், டேவிட் பென்னட் திடீரென உயிரிழந்தார். முன்னதாக, இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, நல்ல நிலையில் இருந்த பென்னட்டிற்கு இப்படி ஒரு நிலைமை வந்ததும், அவருக்கு சிகிச்சை  செய்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்

இதனைத் தொடர்ந்து, டேவிட் பென்னட்டிற்கு பொருத்தப்பட்ட இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதிய தகவல் ஒன்று வெளியாகி, அவர்கள் மத்தியில் சிறிதொரு பதற்றத்தை உருவாக்கி உள்ளது. அந்த பன்றியின்  இதயத்திற்குள் டிஎன்ஏ போர்சின் சைட்டோமெகலோ வைரஸ் என்ற தொற்று இருந்ததை கண்டறிந்துள்ளனர். இருந்த போதும் இந்த வைரஸ் தான், தொற்றினை ஏற்படுத்தி இருக்கும் என்பது அறிகுறி எதுவும் இன்னும் கண்டறியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்ட சோதனை

அதே போல, விலங்குகளின் உடலில் இருந்து மனிதர்களுக்கு உறுப்பினை எடுத்து பொருத்தும் போது, சம்மந்தப்பட்ட நபருக்கு புதிய வகையான தொற்றுகளை உருவாக்கும் ஆபத்தான நிலை ஏற்படும் எனவும் ஆராய்ச்சியளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அது மட்டுமில்லாமல், இது போன்ற வைரஸ்களை கண்டறிய அடுத்த கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நபருக்கு, பன்றியின் இதயத்தை பொருத்தி அதில் வெற்றியையும் கண்டனர். தொடர்ந்து, திடீரென அவர் மரணம் அடைய, தற்போது அந்த பன்றியின் இதயத்தில் சில வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம், ஒரு வித அச்சத்தை உருவாக்கி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

HEART TRANSPLANT, PIG HEART, SURGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்