ஒமைக்ரானுக்குன்னே தடபுடலா வருது புது தடுப்பூசி! பிரபல தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் என்ன சொல்லிருக்கு பாருங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கான தடுப்பூசி தற்போது புழக்கத்தில் வந்துள்ள சூழலில் புது ரகமான ஒமைக்ரான் வைரஸுக்கும் ஒரு புது தடுப்பூசியை Pfizer நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Advertising
>
Advertising

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே உருமாறிய டெல்டா வகை வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோன வைரஸ், தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் தான் பெரிய தீர்வாக இருக்கும் என்ற சூழல் உள்ளது. சர்வதேச அளவில் பல மருந்து நிறுவனங்களும் தடுப்பூசிகளை தயாரித்து முறையான அனுமதி உடன் மக்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவின் மற்றொரு ரகமான ஒமைக்ரானுக்கு என பிரத்யேகமாக தனியே ஒரு தடுப்பூசியை Pfizer நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Pfizer நிறுவனத்தின் ஒமைக்ரான் தடுப்பூசி வருகிற மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் இந்த ஒமைக்ரான் தடுப்பூசியை பகிரவும் Pfizer முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒமைக்ரான், ஒமைக்ரான் தடுப்பூசி, கொரோனா தடுப்பூசி, OMICRON, VACCINE FOR OMICRON, PFIZER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்