'H-1B visa'... 'இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்'... 'ஐடி இளைஞர்களின் பல நாள் கனவை நிஜமாக்கிய அமெரிக்கா'... Green Card தொடர்பாக வெளியான அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விசா மற்றும் குடியுரிமை விதிகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்படும் என ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் ஹெச்1பி விசா தொடர்பான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க மக்களுக்கே அங்கு வேலையில் முன்னுரிமை என்றும், வெளிநாட்டவர்களுக்கு பணிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு காரணமாகப் பலர் வேலை இழந்தார்கள். இந்த சூழ்நிலையில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளை, படிப்படியாக நீக்கி பழைய முறைகளை மீண்டும் கொண்டு வரப்படும் என ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

தற்போது அனைத்திற்கும் மேலாகக் கிரீன் கார்டு அதாவது அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய சலுகை அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பல லட்சம் இந்தியர்கள் பெரிய அளவில் நன்மை அடைய உள்ளனர். அதிலும் ஐடி தொடர்பாகப் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணிபுரிந்து வருவதால் அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வேலைவாய்ப்பு மூலம் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் சினீயாரிட்டி அடிப்படையில் தகுதியானவர்களை ஆய்வு செய்து கிரீன் கார்டு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பணிகளை இன்னும் வேகப்படுத்த புதிய திட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது.

கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் சம்பளிமெண்ட் கட்டணம் அல்லது சூப்பர் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்ப வரிசையிலிருந்து முன்னுக்குச் செல்ல ஒரு வாய்ப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள Reconciliation Bill-ன் ஒரு பகுதியாக அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ஹெச்1பி விசா பெற்றுள்ளவர்களின் பிள்ளைகள் 21 வயது ஆன பின்பு இந்த முறையின் கீழ் கிரீன் கார்டு பெறவும் இந்த மசோதா அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க அரசு கிரீன் கார்டு விசா விண்ணப்ப வரிசையில் முன்னுக்குச் செல்ல 5000 டாலர் என்ற தொகையைச் சூப்பர் கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்தக் கட்டணம் மூலம் ஹெச்1பி விசா பெற்று கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளவர்கள் விரைவாக அமெரிக்கக் குடியுரிமை பெற முடியும். கிரீன் கார்டு பெற வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுடன் இருக்கும் இந்தியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

இதற்கிடையே இந்த மசோதா குறித்த இறுதி முடிவும் எடுக்கப்பட உள்ளது. இது மட்டும் அல்லாமல் இது அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் ஒரு திட்டம் என்பதால் அமெரிக்க அரசு இதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்