'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்த 'புதிய மாத்திரை...!' 'வென்டிலேட்டர்களுக்கு குட்பை சொல்லுமா?...' 'இங்கிலாந்து' மருத்துவர்களின் 'புதிய நம்பிக்கை...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரையை இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை நடத்த உள்ளது.
இந்தியாவில் மலேரியாவுக்கு வழங்கப்படும் மாத்திரையான ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா வைரஸ்களின் அளவை கட்டுப்படுத்தும் என கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இது போல, இங்கிலாந்தில் பெரும்பாலும் வலி நிவாரணியாகவும், அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் 'இபுபுரூபன்' என்ற மாத்திரை கொரோனா வைரஸ் சிகிச்சையில் சிறப்பான பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். காரணம், இது சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக பயன்படும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு வந்திருக்கிறது.
மிக குறைந்த விலையில் கிடைக்கிற இந்த மாத்திரைகளை சுவாச பிரச்சினையால் அல்லலுறுகிற கொரோனா நோயாளிகளுக்கு தருகிறபோது, வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படாது என கருதுகிறார்கள்.
எனவே இப்போது லண்டனில் உள்ள கைஸ் மருத்துவமனை, செயிண்ட் தாமஸ் மருத்துவமனை, கிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை சேர்ந்த குழுவினர் இந்தமாத்திரையை நோயாளிகளுக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
அதன்படி கொரோனா தொற்று உடையவர்களுக்கு லிபரேட் என்ற அழைக்கப்படும் சோதனை மூலம் வழக்கமான மருந்துகளுக்கு மத்தியில் கூடுதலாக இபுபுரூபன் மாத்திரைகளை கொடுத்து பரிசோதிக்கப்போகிறார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மனித மருந்துகள் ஆணையத்தின் மதிப்பாய்வு, பாரசிட்டமால் மாத்திரைகள் போலவே இபு புரூபன் மாத்திரையும் பாதுகாப்பானது எனறு தெரிவித்துள்ளது. இந்த மாத்திரைகளால் வியக்கத்தக்க வகையில் பலன் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டால் கொரோனாவால் ஏற்படுகிற சுவாச பிரச்சினைகளால் அல்லாடுகிறவர்களுக்கு வென்டிலேட்டர்களுக்காக திண்டாடுவது முடிவுக்கு வரும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு இன்று கொரோனா உறுதி!.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவின் நிலை என்ன?
- தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்வு!.. ஓரே நாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'டிரம்ப்க்கு தண்ணி காட்டிய ஆன்டிஃபா பாய்ஸ்'... 'யார் இந்த ஆன்டிஃபா குரூப்'?... அரண்டு போன அமெரிக்கா!
- VIDEO : ரெண்டு மாசமா 'ஆஸ்பிட்டல்'ல வேல... சர்ப்ரைஸ் 'விசிட்' அடித்த 'தாய்'... 'இன்ப' அதிர்ச்சியில் உறைந்து நின்ற 'பிள்ளைகள்'!
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!
- "கல் வீசி தாக்க ஆரம்பிச்சுட்டாங்க!".. 'தகன மேடையில்' இருந்து 'கொரோனா' நோயாளியின் 'பாதி எரிந்த' உடலை 'தூக்கிக்கொண்டு' ஓடிய 'உறவினர்!'..
- 'அவசர' அவசரமாக 'ஊருக்குள்' வந்த 'மாப்பிள்ளை'!.. 'தாலி' கட்டப்போற 'கொஞ்ச' நேரத்துக்கு முன் தெரியவந்த 'ஷாக்'!
- 'ரெம்டெசிவிர்' மருந்தை 'இப்படி கொடுத்தால்...' 'செம்ம ஐடியா!...' 'நிச்சயம்' பலன் 'தரும்...' 'வீட்டில் இருந்தபடியே ட்ரீட்மென்ட்...'
- 'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!
- 'சாருக்கு' 5 வயசு தான் ஆகுது... ஊரடங்கை வீணாக்காமல்... அப்பாவோட சேர்ந்து 'பிசினஸ்' செய்யும் குட்டிப்பையன்!