சீனாவில் பரவும் புதிய வகை 'Langya' வைரஸ்..? - இதுவரை தொற்று பாதித்துள்ள விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் லாங்யா எனப்படும் புதியவகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் தொற்று 35 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "பூஜை செஞ்சா.. மாமியார் - மருமகள் சண்டை நீங்கும்.. நகை 2 மடங்காகும்".. நூதனமாக உருட்டிய ஆசாமி.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!

சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் வருகையினால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. இந்நிலையில், சீனாவின் இரண்டு மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெனிபவைரஸ்

சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் ஹெனிபவைரஸ் என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் ஹெனிபவைரஸ் என்றும் லாங்யா ஹெனிபாவைரஸ், LayV என்றும் அழைக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு நடத்தப்பட்ட ஸ்வாப் பரிசோதனையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்த வைரஸ் தாக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஹெனிபவைரஸ், விலங்குகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்றும், காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, தசை வலி, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருப்பதாகவும் ஆய்வில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் ஹெனிபவைரஸுக்கு தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை எனவும் இந்த வைரஸ் தாக்குலை சந்தித்தவர்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை

டியூக்-என்யுஎஸ் மருத்துவ கல்லூரியின் (Duke-NUS Medical School) வளர்ந்து வரும் தொற்று நோய்களுக்கான திட்டத்தின் பேராசிரியர் வாங் லின்ஃபா இதுபற்றி பேசுகையில்,"லாங்யா ஹெனிபாவைரஸ் பாதிப்புகள் ஆபத்தானவையாகவோ அல்லது மிகவும் தீவிரமானவையாகவோ அல்ல. எனவே பீதி அடைய தேவையில்லை. இருப்பினும் வைரஸ்கள் மனிதர்களை தாக்கும்போது அவற்றின் தாக்கங்கள் கணிக்கமுடியாதவையாக உள்ளன. ஆகவே எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், சீனாவின் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் லாங்யா ஹெனிபாவைரஸ் நோய்த்தொற்றின் 35 நோயாளிகளில் 26 பேருக்கு காய்ச்சல், உடல் எரிச்சல், இருமல், பசியின்மை, தசை வலி, குமட்டல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற மருத்துவ அறிகுறிகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read | கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.. Zoo மேல கை வைக்க முடிவெடுத்த அதிகாரிகள்.. நொறுங்கிப்போன மக்கள்..!

CHINA, LANGYA VIRUS, PEOPLE, INFECT, லாங்யா வைரஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்