குழந்தைகளுக்கு 'கொரோனா' பரிசோதனை செய்தபோது தெரியவந்த 'ஷாக்' ரிப்போர்ட்.. 'உறைந்துபோய்' நிற்கும் 'உலக சுகாதார மையம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் 47 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ள நிலையில் 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
வயது வித்தியாசமின்றியும், ஏழை பணக்காரர்கள் வித்தியாசமின்றியும் பாரபட்சமில்லாமல் அனைவரையும் தாக்கி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு அரிய வகை நோய்த்தொற்று உருவாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோய்த்தொற்று எதனால் ஏற்பட்டது என்கிற ஆராய்ச்சியிலும் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜெனிவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்க்கோவா, கொரோனா வைரஸ் பரவலுடன் சேர்ந்து குழந்தைகளை தாக்கக் கூடிய அரிய வகை நோய்த்தொற்று பரவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பரிசோதனை செய்யும்போது இது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அரிய வகை நோய்த்தொற்றின் பாதிப்பை அழிப்பது சற்றே சிரமமாக இருப்பதாகவும், இந்த நோய்த்தொற்றை புரிந்துகொள்வதற்கு மருத்துவர்கள் முயன்று வருவதாகவும், ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகளுக்கும் கூட இந்த நோய் பரவியிருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சி தருவதாக உள்ளதாகவும் கூறிய அவர், “ஆகவே இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்” என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "2 மாசம் மறைச்சு வெச்சு.. விமானத்துல பயணிகளை அனுப்பி.. இந்த வேலையை பாத்துருக்காய்ங்க"! .. 'டிரம்ப்பை' தொடர்ந்து 'சீனாவை' டிசைன் டிசைனாக 'வறுத்தெடுக்கும்' வெள்ளைமாளிகை அதிகாரிகள்!
- சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா!?... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது!.. முழு விவரம் உள்ளே
- 'இதெல்லாம் கண்டிப்பா நீங்க பின்பற்றணும்!'.. தமிழகத்தில் சலூன் கடைகள் இயங்க அனுமதி!.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.. முழு விவரம் உள்ளே
- "உலகத்துலயே ஒரு நாட்டின் பிரதமரை இப்படி வரவேற்பதை யாரும் பாத்துருக்க மாட்டோம்!".. 'மருத்துவ ஊழியர்களின்' நூதன' ஆர்ப்பாட்டம்' .. 'தீயாய் பரவும்' வீடியோ!
- 'ஆத்தாடி!.. இருக்குற பிரச்னை போதாதுனு 'இது' வேறயா?'.. சூப்பர் புயலாக மாறிய 'அம்பன்'!.. என்ன நடக்கப்போகிறது?.. இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!
- 'கொரோனா நெருக்கடி'... 'பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி இருக்கு'... பிரபல நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
- 'எடுத்துக்கோங்க...! கொரோனா நிவாரண நிதிக்கு வச்சுக்கோங்க...' 'பிச்சை எடுத்து...' 'சிறுக சிறுக சேமிச்ச பணத்தை...' நல்ல மனம் படைத்த தாத்தா...!
- 'புகையிலை புரதத்திலிருந்து' கொரோனாவுக்கு 'மருந்து...' 'பிரிட்டிஷ் அமெரிக்கன்' டொபாக்கோ நிறுவனம் 'அறிவிப்பு...' வாரத்திற்கு '30 லட்சம்' மருந்துகள் தயாரிக்க 'முடிவு...'
- 'அதிகரிக்கும் கொரோனா வைரஸ்'... 'ஓரின சேர்க்கையாளர்களுக்கு வந்த சோதனை'... ஐ.நா எச்சரிக்கை!
- 'இந்த மக்கள் யாரையும் உள்ள விடாதீங்க!'.. கர்நாடக அரசு கெடுபிடி... முதல்வர் எடியூரப்பா அதிரடி!.. என்ன நடந்தது?