"இனி எவ்ளோ கி. மீ தூரத்துல இருந்தாலும் முத்தம் குடுக்கலாம்".. காதலர்களை Attract செஞ்ச புதிய கண்டுபிடிப்பு!!..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகத்தில் தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு தான் வருகிறது.  அது பற்றி பல்வேறு விஷயங்கள் வெளியே தெரிய வரும்போது நிச்சயமாக நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நான் பட்டபாடு இருக்கே".. குடி பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்.. பலரையும் கவர்ந்த சம்பவம்!!

இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என நாம் நினைத்து பார்த்த விஷயங்கள் எல்லாம் தற்போது சாத்தியமாகி நம்மை ஒருவித சிலிர்ப்பையும் ஏற்படுத்த வைக்கும் வகையிலும் அமைந்து வருகிறது.

சமீபத்தில் கூட பறக்கும் பைக் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தற்போது வினோதமான ஒரு கண்டுபிடிப்பு குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, சீனா நாட்டில் உள்ளவர் இந்த கண்டுபிடிப்பை செய்ததாக தகவல்கள் கூறுகின்றது. பொதுவாக காதலர்கள் அடிக்கடி சந்தித்து கொள்ளும் தூரத்தில் இருக்கும் போது முழுக்க முழுக்க அன்பு நிறைந்தபடி இருக்கும். ஆனால் அதே வேளையில் காதலர்கள் இருவரும் சற்று தொலைவில் இருந்து காதலித்து வரும் சமயத்தில், அவர்கள் ஒருவரை ஒருவர் அதிகம் மிஸ் செய்வார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

அப்படி காதலர்கள் இடையே இருக்கும் ஒரு குறையை போக்குவதற்காக ஒரு டெக் நிறுவனம் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அவர்கள் கண்டுபிடித்துள்ள கருவியின் படி தொலைவில் இருக்கும் துணைகளுக்கு முத்தங்களை அனுப்பலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

இந்த கருவியின் பெயர் ரிமோட் கிஸ் என தெரியும் நிலையில், இந்த கருவியில் நகரும் தன்மை கொண்ட சிலிக்கான் உதடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த கருவியின் மூலம் நமக்கு விரும்பும் நபருக்கு முத்தத்தை அப்லோடு செய்யலாம். அதேபோல அவர்களிடமிருந்தும் நாம் விரும்பும் முத்தத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்த கருவி வேலை செய்வதற்காக இருவரும் இந்த கருவி மற்றும் அது தொடர்பான செயலியை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதன் பின்னர் இருவரும் மாறி மாறி வீடியோ கால் செய்யும் சமயத்தில் முத்தங்களை அனுப்பிக் கொள்ள முடியும் என்றும் தகவல்கள் சொல்லுகின்றது. மேலும் ஒருவர் எப்படி முத்தம் கொடுத்து கொள்கிறாரோ அதேபோன்ற முத்தத்தை சென்சார் மூலம் பதிவு செய்து மறுபக்கம் இருக்கும் நபருக்கு அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது

அதுமட்டுமில்லாமல் அந்த முத்தம் கொடுப்பது அப்படியே துல்லியமாகவும் அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த கருவியை கண்டுபிடித்தவர் கல்லூரி நாட்களில் தனது காதலியை விட்டு தொலைவில் இருந்ததாகவும் அந்த சமயத்தில் அவரை அதிகம் மிஸ் செய்த சூழலில் தற்போது இப்படி ஒரு ஆலோசனை தோன்றி அதன் மூலம் இந்த கருவி உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த முத்தம் கொடுக்கும் கருவி தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் அதிகம் வைரலாகி வரும் சூழலில் பலரும் பலவிதமான கருத்துகளையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மகள்.. வேதனையில் இறந்த தந்தை.. "இப்ப அம்மாவும்".. மனம் நொறுங்க வைக்கும் சம்பவம்!!

NEW DEVICE, KISS, NEW DEVICE FOR KISS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்