இஸ்ரேலில் திடீரென பரவும் ‘புதிய’ வகை கொரோனா?.. ஏர்போர்ட்டில் 2 பேருக்கு பாதிப்பு.. அறிகுறிகள் என்னென்ன..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல் நாட்டில் இரண்டு பேருக்கு புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கொரோனோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த சூழலில் சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அந்நாட்டின் பல நகரங்களில் மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா வைரஸின் ஓமைக்ரான் திரிபின் BA.1 மற்றும் BA.2 ஆகிய இரு திரிபுகள் ஒன்றிணைந்து புதிய வைரஸாக உருமாறியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நடைபெற்றது. அப்போது இரண்டு பயணிகளிடமிருந்து இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இது காய்ச்சல், தலைவலி மற்றும் தசைநார் சிதைவு போன்ற லேசான அறிகுறிகளையே உண்டு பண்ணுவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்