'உருமாறும் கொரோனா'... 'இவர்கள்தான் ஈஸியான டார்கெட்'... 'மருத்துவர்களுக்கு இருக்கும் சிக்கல்'... இளம் தமிழ் மருத்துவர் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புதிதாகப் பரவும் கொரோனா யாரையெல்லாம் எளிதாகத் தாக்கும் என்பது குறித்து இளம் தமிழ் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பழைய வைரஸ் போல இல்லாமல் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் பிரிட்டனில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் பிற நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய நோய்த்தொற்று முந்தைய கொரோனா வைரஸை விட அதி வேகத்தில் பரவக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர், பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் தெளிவாக விவரித்துள்ளார். அதில், ''பிரிட்டனில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் 39 ஆயிரம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 350 உயிரிழப்புகள் நடந்துள்ளன. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வைரஸ் என்பது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த புதியவகை கொரோனா  மற்றொருவருக்கு வேகமாகவும் வலுவாகவும் பரவுகிறது. அதனால்தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மருத்துவர்களுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 10 நோயாளிகளைக் கையாளும்போது எதிர்கொள்ளும் வைரஸ் ஆபத்துகளை விட, அதிக எண்ணிக்கையிலான வைரஸ் பாதித்த நோயாளிகளை ஒரே நேரத்தில் அணுகுவதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எளிதாகத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே பழைய கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை எளிதாகப் பாதித்து வந்தது. இந்த புதிய கொரோனா 40 வயதளவில் இருப்பவர்களைக்கூட எளிதாகத் தாக்குகிறது. வைரஸ் பாதிப்பு தீவிரமானால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்'' என எச்சரித்துள்ள ரிஸ்வியா மன்சூர், எச்சரிக்கை உணர்வுடன் பொதுமக்களும் இருந்தால் மட்டுமே இந்த கொடிய வைரஸில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்