"வீட்டுல சும்மா இருக்கறதில்ல"... "எதையாச்சும் டிரெண்ட் பண்ணிட்டே இருக்க வேண்டியது"... வைரலாகும் 'பில்லோ சேலஞ்ச்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரசின் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டிலேயே இருப்பதால் தங்களுக்கு பிடித்தமான செயல்களை செய்து நேரத்தினை கழித்து வருகின்றனர். சமையல், ஓவியம், வீட்டை சுத்தம் செய்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தங்களை திசை திருப்பும் நிலையில் தற்போது 'Pillow Challenge' என்ற பெயரில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
உடலில் வேறு உடை எதுவும் அணியாமல் வெறும் தலையணையை மட்டுமே கட்டிக் கொண்டு பில்லோ சேலஞ்ச் என்ற பெயரில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இது ஒருவித ஃபேஷன் சேலஞ்ச் போன்று ஆன்லைனில் வலம் வருகிறது. அனைத்து துறையிலுள்ள பிரபலங்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் இந்த சவாலில் ஈடுபட்டு புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தாங்கள் மட்டும் தலையணையை அணிந்து கொள்ளாமல் தங்களது செல்லப்பிராணிகளான பூனை, நாய் போன்றவற்றிற்கும் இந்த தலையணை உடையை அணிந்து அந்த புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் இது போன்ற சேலஞ்சுகள் மூலம் உலகெங்கிலுமுள்ள மக்கள் தங்களது நேரத்தை கழித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...
- 'இன்டர்நெட்டில் அதிகம் தேடிய வார்த்தை'... 'மீண்டும் சென்னை முதலிடமா'?... 'லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்'... ஷாக்கிங் ரிப்போர்ட்!
- ‘பசிக்கு தண்ணிய குடிச்சுட்டு இருக்கும்’.. குழந்தைங்க ‘பசிக்குதுனு’ அழுறாங்க.. ஊரடங்கால் கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்..!
- கொரோனாவால் 'நிலைகுலைந்துள்ள' நாட்டில்... லாக் டவுனை 'தளர்த்த' கோரி 'போராடிய' மக்களால் 'பரபரப்பு'...
- "என் புருஷன கடைசியா ஒரு தடவ பாக்கணும்"... 2000 'கி.மீ' தொலைவில்... உயிரிழந்த "கணவர்"... கலெக்டர் செய்த உதவி!
- "இனிமே சரிப்பட்டு வராது"... "பஸ், ட்ரெயின நம்பி பிரயோஜனமில்ல"... நீட்டித்த 'ஊரடங்கு'... 'சைக்கிளில்' ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்!
- இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...
- தமிழ்நாடு: “சாப்பாடு இல்ல.. காலில் செருப்பு கூட இல்ல”.. 2 நாட்கள்... 170 கி.மீ நடந்தே வந்த 7 வயது சிறுவன்.. உருக்கும் சம்பவம்! வீடியோ!
- 'இந்தியாவில்' கொரோனா பாதிப்பு... 'மே' மாதம் 'உச்சத்தை' தொட வாய்ப்பு 'ஆனால்'... வெளியாகியுள்ள 'கணிப்பு'...
- "ஆத்தி கையில கேரம் போர்டு கூட இல்லையே"... "இப்போ எங்கிட்டு போய் மறையுறது?"... திருப்பூர் போலீசார் பாணியில் வீடியோ வெளியிட்ட சேலம் போலீசார்!