விமானத்தின் குப்பைத் தொட்டிக்குள் இருந்து கேட்ட அழுகைச் சத்தம் – பச்சிளங்குழந்தையை குப்பையில் வீசிய தாய்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மடகாஸ்கரில் இருந்து மொரீஷியஸ் விமான நிலையத்திற்கு அந்த விமானம் வந்த உடன் வழக்கமான பணிகள் துவங்கின. ஏர் மொரீஷியஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறங்கிய பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் விமான கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
>
Advertising

குப்பைத்தொட்டியில் குழந்தை

அதிகாரிகள் விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியை ஆய்வு செய்ய முயன்றபோது அதனுள்ளே அழுகை சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் குப்பைத்தொட்டியை கவனமாக பிரித்துப் பார்த்ததில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று இருந்திருக்கின்றது.

தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு..? முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

தகவல் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. பயணிகளை விசாரித்த காவல்துறை, சந்தேகத்திற்குரிய பெண் ஒருவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது.

20 வயதான அந்தப்பெண், சமீபத்தில் குழந்தை பெற்றிருப்பதாக மருத்துவர்கள் பரிசோதனை வாயிலாக கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, அவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது மொரீஷியஸ் காவல்துறை.

சிகிச்சைக்குப் பின் விசாரணை

தற்போது குழந்தை மற்றும் அந்தப் பெண்மணி ஆகியோர் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சிகிச்சை முடிவடைந்த பிறகு விசாரணை நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப்பெண் வேலைக்கான 2 வருட விசாவில் மொரீஷியஸ் வந்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வச்ச நம்பிக்கை எல்லாம் வீணா போச்சு.. டிரெண்டாகும் ‘புது’ வார்த்தை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

NEW BORN BABY, AIR MAURITIUS PLANE’S TOILET, AIRPORT, குழந்தை, குப்பைத்தொட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்