"இது மீன்தானா? என்ன இப்படி இருக்கு.?".. மீனவர் போட்ட வித்தியாசமான புகைப்படம்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடலில் வித்தியாசமான மீன் ஒன்றை பிடித்திருக்கிறார் ரஷ்யாவை சேர்ந்த மீனவர் ஒருவர். அந்த மீனின் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Breaking: ஓய்வை அறிவித்தார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மித்தாலி ராஜ்..அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!

ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவரான ரோமன் ஃபெடோர்சோவ் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 39 வயதான ரோமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கிறார். வலை வீசிய ரோமன் சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு தனது அதிர்ஷ்டத்தை சோதித்திருக்கிறார். வலையை அவர் வெளியே எடுக்க, அதன் உள்ளே வித்தியாசமான ஏதோ ஒன்று இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

வலையை படகிற்குள் இழுத்த ரோமன், உள்ளே இருந்த வித்தியாசமான மீனை வெளியே எடுத்திருக்கிறார். அதனுள் ஒளிஊடுருவக்கூடிய வெள்ளை மீன் ஒன்று இருந்திருக்கிறது. பச்சை நிறக் கண்கள், வித்தியாசமான வால் மற்றும் கிழிந்த இறக்கைகள் போல தோற்றமளிக்கும் துடுப்புகள் என வினோதமாக காட்சியளிக்கிறது இந்த மீன்.

ஆழ்கடல்

இந்த மீனின் புகைப்படத்தை ரோமன் ஃபெடோர்சோவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "Frankenstein's Fish" இது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் இதுகுறித்து கமெண்ட் செய்துவருகின்றனர். அதில், ஒருவர்,"எனது மகன் இந்த மீன் 650 முதல் 8,530 அடி ஆழத்தில் காணப்படுகின்றன என இங்கிலாந்து சுறா ஆய்வக அமைப்பு தெரிவித்ததாக கூறுகிறார். இந்த மீனின் உடலில் அதிக நிறங்கள் இருப்பதில்லை எனவும் கடலில் அதிக அழுத்தத்தில் வாழ இவை பழக்கப்பட்டவை" என கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் ரோமன் மற்றொரு மீனின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த மீன் கருமை நிற தோலுடன் காணப்படுகிறது. இந்த பதிவில் கமெண்ட் செய்துள்ள ஒருவர், அந்த மீன் பரோட்ராமா எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரோமன் ஃபெடோர்சோவ் உலகம் முழுவதிலும் உள்ள கடல்களில் பயணம் செய்து, அங்குள்ள வித்தியாசமான கடல் உயிரினங்களை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மறக்காமல் தன்னுடைய வலையில் சிக்கும் உயிரினங்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வழக்குமும் ரோமனுக்கு உண்டு. இதன் காரணமாகவே 65,000 பேர் ரோமனை இன்ஸ்டாகிராம்  பின்பற்றிவருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் டிராகன் வடிவிலான சிமேரா (chimaera) என்னும் மீனை நார்வே கடல் பகுதியில் பிடித்தார் ரோமன். பார்ப்பதற்கு குட்டி டிராகன் போலவே இருக்கும் இந்த மீனை புகைப்படம் எடுத்து ரோமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read | நடுராத்திரில அப்பார்ட்மெண்ட்டே அதிரும்படி கேட்ட சத்தம்.. காலைல வயதான தம்பதியின் வீட்டுக்குள்ள போனவர் கண்ட காட்சி.. குழப்பத்தில் போலீஸ்..!

SEA FISH, MAN, POST PICTURE, MAN POSTS PICTURE OF DEEP SEA FISH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்