Harry and Meghan : "அந்த மெசேஜ் அனுப்பியது என் அப்பாவே இல்லை".. நெட்பிளிக்ஸ் டாக்குமெண்டரியில் சொன்ன மேகன்..? மறுப்பு தெரிவிக்கும் மேகனின் தந்தை ?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும அவருடைய மேகன் தம்பதி நெட்பிளிக்ஸில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் வைரலாகி வருவதுடன் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி சென்சேஷனல் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to Ⓒ copyright to their respective owners.

Also Read | இயற்கை கழிவுகளிலிருந்து அவதார் கேரக்டர் பொம்மைகள்.. மாஸ் காட்டிய அரசுப்பள்ளி மாணவர்கள்..! Avatar The Way Of Water

அத்துடன் இந்த ஆவணப்படத்தில் பிரிட்டன் ராஜகுடும்பத்தை விமர்சித்துள்ளதாகவும், அதாவது மேகன் மெர்க்கலை குடும்ப உறுப்பினராக கருத ராஜகுடும்பம் மறுத்ததாக அந்த ஆவணப்படத்தில் ஹரி- மேகன் தம்பதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் பரவியதை அடுத்து இந்த ஆவணப்படம் சென்சேஷனல் ஆகியுள்ளது.

இதனிடையே The Crown என்கிற பெயரில் வெளியாகியுள்ள இந்த தொடர் வெளியான முதல் நாளே 2.4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய நிலையில், ஏற்கனவே மகாராணியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட The Crown என்னும் ஒரு தொலைக்காட்சித் தொடரும் வெளியானது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Getty Images/Netflix

ஆனாலும் ஹாரி - மேகன் தொடர்பான இந்த ஆவணத்தொடரை இன்னும் அதிகம்பேர் பார்த்துள்ளனர். விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும் இன்னொரு புறம் இந்த தொடருக்கு உண்டான வரவேற்புகளும் அதிகமாகவே இருக்க செய்கிறது. பலரும் ஹாரி - மேகன் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Image: Netflix

இதனிடையே ஹாரி மேகனை திருமணம் செய்ய இருந்த நேரத்தில், மேகன் தனது தந்தையை 20 முறை மொபைலில் அழைத்து பேச முயற்சித்ததாகவும், ஆனால் அவரது தந்தை தாமஸ், “மேகன், நான் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்” என மெசேஜ் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ல மேகன், தனது தந்தை தன்னை எப்போதும் மேக் என்றே அழைப்பார், எனவே தனது தந்தை மொபைலை வேறு யாரோ பயன்படுத்தியிருக்கலாம் என நெட்பிளிக்ஸ் தொடரில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

Image: GB News/Youtube

மேகன் சொன்ன இந்த கருத்தை  மறுத்துள்ள அவரது தந்தை தாமஸ், தனது மொபைலை வேறு யாரும் பயன்படுத்தவில்லை என்றும், இதற்கு முன்பும் தான் மேகனை மேகன் என அழைத்துள்ளதாகவும் கூறியதாக வெளியான செய்தி இன்னும் இந்த டாக்குமெண்டரி தொடர்பாக பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Also Read | The Crown : ராஜகுடும்பத்தை விமர்சிக்கிறதா? பரபரப்பை கிளப்பிய இளவரசர் ஹாரி, மேகனின் சென்சேஷனல் ஆவணப்படம்.!

THE CROWN, NETFLIX, HARRY MEGHAN DOCUMENTARY, BRITAIN, ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்