Nepal plane crash: இதே மாசம், இதே ரூட்.. 10 வருஷத்துக்கு அப்புறம் இப்போ மறுபடியும் நடந்திருக்கு,. அதிகாரிகள் சொல்லிய ஷாக்கிங் நியூஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

22 பயணிகளுடன் கிளம்பிய நேபாள விமானம் ஒன்று விபத்தை சந்தித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இதே பாதையில் 10 வருடங்களுக்கு முன்னரும் விபத்து ஏற்பட்டது குறித்து மக்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | 22 பயணிகளுடன் காணாமப்போன விமானம்.. பைலட்டின் போனிலிருந்து வந்த சிக்னல்..சம்பவ இடத்துக்கு போன அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..!

காணாமல் போன விமானம்

நேபாள நாட்டின் போகரா பகுதியில் இருந்து ஜோம்சோமுக்கு நேற்று காலை 9.55 மணிக்கு கிளம்பிய 9 NAET விமானம், சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதன் காரணமாக அச்சம் எழுந்த நிலையில், அந்த விமானம் விபத்தை சந்தித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள், மேலும், அந்நாட்டைச் சேர்ந்த 3 விமான குழு உறுப்பினர்கள் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

முஸ்டாங் மாவட்டத்தில் தசாங்கின் சனோ ஸ்வேர் பீர் என்ற இடத்தில் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த அசோக் குமார் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகியோர் பயணித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோகம்

இதுகுறித்துப் பேசிய விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தியோ சந்திரசேகர் லால் கார்ன் "10 ராணுவ வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவ விமானம் ஒன்று, இதுவரையில் 14 உடல்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக

இந்நிலையில், இதே மாதம், இதே பாதையில் கடந்த 2012 ஆம் ஆண்டும் இதே போன்று விமானம் ஒன்று விபத்தை சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த உள்ளூர் விமான சேவை நிறுவனமான அக்னி ஏர்-க்கு சொந்தமான Dornier Do-228  என்ற விமானம் போகரா பகுதியில் இருந்து ஜோம்சோமுக்கு சென்றது.

தரையிறங்க முயற்சித்த அந்த விமானம், அத்திட்டத்தை கைவிட்டு விமான நிலையத்தை சுற்றி பறக்க துவங்கியிருக்கிறது. அப்போது, விமானத்தின் இறக்கை ஒன்று மலைக்குன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பயணித்த 21 பேரில் 15 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 10 வருடங்கள் கழித்து அதே பகுதியில் மீண்டும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "இதுக்கு என்ன பதில் சொல்றது"..சிறுமியின் அப்பா கேட்ட கேள்வி.. IAS ஆபிசர் போட்ட ட்வீட்.. அப்படி என்னய்யா கேட்டாரு?

NEPAL, NEPAL PLANE, NEPAL PLANE CRASH, நேபாள விமானம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்