'6000 வருஷம் ஆச்சு'...'சுவிங்கத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் உருவம்'...சுவாரசிய தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்காண்டிநேவியா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுவிங்கத்தை வைத்து, 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உருவம் இப்படித்தான் இருந்தது என வெளியாகியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

காந்தம் ஈர்க்கும் கண்கள், கம்பீர முகத்துடன் இருக்கும் இந்த பெண்ணின் புகைப்படம் தான் 6000 வருடங்களுக்கு முன்பு, மனிதர்கள் இப்படித்தான்  இருந்துள்ளனர் என்பதற்கான முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது. மனித உடலின் எந்த பாகமும் இல்லாத நிலையில், அவர் மென்ற சுவிங்கத்தை வைத்து அதிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மரபணு நுண்ணுயிரிகளை வைத்து இந்த உருவத்தை வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய கோபன் ஹாகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹேன்ஸ் ஷ்ரோடர்  “இந்த சுவிங்கமானது மரத்திலிருந்து எடுக்கப்படும் பசை. இது முன்னோர்களின் மரபணுக்களைக் கண்டறிய மதிப்பற்ற ஆதாரம்” என்று கூறியுள்ளார். மேலும் அந்த குறிப்பிட்ட பெண்ணின் மரபணுவை வைத்து அவர் ஐரோப்பாவின் மத்திய பகுதியில் வேட்டையாடும் பெண் என்றும், அவர் கருமையான முகம், அடர் கருஞ்சிவப்பு நிற கூந்தல் மற்றும் நீல நிற கண்களைக் கொண்டிருப்பவராக இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே மரபணு டிகோட் செய்யப்பட்டதையடுத்து, அதிலிருந்து இந்த புகைப்படம் வடிவமைக்கப்ட்டுள்ளதாக ஹேன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த சுவிங்கத்தில், பற்களின் தடையங்கள் இருப்பதை வைத்து அது சுவிங்கம் என கண்டறியப்பட்டுள்ளது. அதை வைத்து பல் வலி அல்லது மற்ற நோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

NEOLITHIC CHEWING GUM, FEMALE HUNTER, ANCIENT DANE

மற்ற செய்திகள்