"இந்த காலத்துக்கும் அவர் மாதிரி ஒருத்தர் வேணும்".. கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் உருக்கம்.. எழுந்து நின்று கைதட்டிய பிரபலங்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி பேசிய உரை பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | மே 18-ல் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன்.. செய்தியாளர்களிடம் பேசிய முதல் வார்த்தை..

கேன்ஸ் திரைப்பட விழா

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம்.  இந்த ஆண்டு பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து, பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்கேற்பது வழக்கம்.  அந்த வகையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், கமல்ஹாசன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

போர்

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்றுவரும் சூழலில் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி பேசிய வீடியோ திரையிடப்பட்டது. அந்த விடியோவில் "மானிடர்களின் வெறுப்பு கடந்து போகும், சர்வாதிகாரிகள் மாண்டு போவார்கள். மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரம் மக்களிடமே வந்து சேரும்.." என்று 'தி கிரேட் டிக்டேட்டர்' படத்தில் சார்லி சாப்ளின் பேசிய இறுதிக் காட்சி வசனத்தை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார் ஜெலன்ஸ்கி.

அப்போது,"சார்லி சாப்ளின் தனது தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் மூலமாக அன்றைய சர்வாதிகாரியான ஹிட்லரை பகடி செய்தார். அதனால் ஹிட்லர் வீழ்ச்சியடையவில்லை. இருப்பினும் சினிமாவிற்கு நன்றி. இன்றைக்கும் சினிமா உயிர்ப்புடன்தான் இருக்கிறது, மவுனமாகிவிடவில்லை என்பதை நிரூபிக்க இன்னொரு புதிய சாப்ளின் பிறந்துவர வேண்டுமா? சினிமா பேசப்போகிறதா? இல்லை மவுனம் காக்கப்போகிறதா?" என ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார்.

மவுனம்

திரைப்படங்கள் உக்ரைன் போரைப் பற்றி பேசவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்," சினிமா மவுனமாகத்தான் இருக்குமா? அல்லது எங்களுக்காக குரல் கொடுக்குமா? ஒரு சர்வாதிகாரி இருந்தால், சுதந்திரத்துக்காக ஒரு போர் நடந்தால் அப்போது ஒற்றுமை அவசியம். சினிமா இந்த ஒற்றுமைக்கு வெளியே நிற்கப்போகிறதா? அல்லது இதனை எதிர்த்து கேள்வி கேட்கப்போகிறதா?" என உருக்கமாக பேசினார்.

உக்ரைன் அதிபர் பேசி முடித்ததும் அரங்கத்தில் இருந்த பிரபலங்கள் அனைவரும் எழுந்துநின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.

கவுரவம்

75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய கருவாக 'போர்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு நாள் முழுவதும் உக்ரைன் திரை கலைஞர்களுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடந்த மாதம் உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மரணமடைந்த லிதுவேனிய இயக்குநர் மன்டாஸ் க்வேடாராவிசியஸ் இயக்கிய மரியுபோலிஸ் 2 என்ற ஆவணப்படம் திரையிடப்படுகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CANNES 2022, CANNES FILM FESTIVAL 2022, ZELENSKY, UKRAINE PRESIDENT, கேன்ஸ் திரைப்பட விழா 2022, உக்ரைன் அதிபர், வொலொடிமிர் ஜெலன்ஸ்கி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்