'ஒரு வருசமா கண்ணுக்குள்ள ஒரே உறுத்தல்'... 'அசால்ட்டாக விட்டதன் விளைவு'... அதிர்ந்து போன மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஓராண்டாகக் கண்ணில் ஏதோ உறுத்துகிறது என எண்ணிய நபர் அதைக் கவனிக்காமல் விட்ட நிலையில், அதைச் சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

சீனாவைச் சேர்ந்தவர் வான். இவருக்குக் கண்ணில் கடந்த ஓராண்டாக ஏதோ உறுத்துவது போன்ற உணர்வு இருந்து வந்துள்ளது. ஆனால் அதைச் சாதாரணமாக எண்ணிய அவர் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஒரு கட்டத்தில் உறுத்துவது அதிகமாகி கடுமையான வலியாக மாறியுள்ளது. இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என எண்ணிய அவர் மருத்துவரை நாடியுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் கண்களைச் சோதனை செய்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். வலியால் அவதிப்பட வானின் கண்களுக்குள் 20 உயிருள்ள புழுக்கள் இருப்பதை மருத்துவர் கண்டுபிடித்தார். இதையடுத்து அவற்றை உடனே கண்ணிலிருந்து அகற்ற முடிவு செய்த மருத்துவர், புழுக்களை அகற்றும் போது அதனை வீடியோ எடுத்து அதைப் பதிவிட்டுள்ளார். அதில் மருத்துவர் வானின் கண்ணிலிருந்து புழுக்களை எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வைப்பதும், அதில் புழுக்கள் நெளிவதும் பதிவாகியுள்ளது.

Thelazia Callipaeda என்று அழைக்கப்படும் இந்த வகை புழுக்கள் நாய் மற்றும் பூனையில் காணப்படும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். நாய் மற்றும் பூனையின் கழிவுகளில் அமரும் ஈக்கள் மனிதர்கள் மீது அமரும் போது அதன் தொற்று மனிதர்களுக்குப் பரவும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்