"அந்த Bomb-அ புதின் யூஸ் பண்ணா.. நேட்டோ நிச்சயம் களத்துல இறங்கும்"..உலக நாடுகளை அதிர வைத்த பைடன்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

Advertising
>
Advertising

அதிகாலை 2.45 க்கு சைக்கிள்ல ரோந்து போன IPS அதிகாரி.. சென்னையை கலக்கும் சிங்கப் பெண்.. டிவிட்டரில் முதல்வர் சொன்ன விஷயம்..!

போர்

நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்து வந்தது. இதனை கடுமையாக எதிர்த்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைனின் கீவ், கார்கிவ் மற்றும் மரியு போல் ஆகிய நகரங்களில் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே போர் மோசமாக நடைபெற்று வருகிறது.

இந்த போர் காரணமாக இதுவரையில் 925 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்து உள்ளது. இந்த போர் காரணமாக, இதுவரையில் 3 மில்லியன் உக்ரைன் மக்கள் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

G7 மாநாடு

ரஷ்யா - உக்ரைன் இடையே கடும் போர் நடந்துவரும் நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் G7 மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் நேட்டோ, ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்," ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒருவேளை கெமிக்கல் குண்டுகளை உக்ரைன் போரில் பயன்படுத்தினால் நேட்டோ அதற்கு பதிலடி தரும்" என எச்சரித்தார்.

அதன்பிறகு இன்று உக்ரைனின் அண்டை நாடான போலந்திற்கு அமெரிக்க அதிபர் பயணம் செய்திருக்கிறார். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான போலந்திற்கு பைடன் சென்றிருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கெமிக்கல் குண்டு

மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கெமிக்கல் குண்டு பற்றி ஏற்கனவே பேசியிருந்த பைடன்," ஐரோப்பாவில் கெமிக்கல் மற்றும் அணு ஆயுதங்களை அமெரிக்கா வைத்திருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், உக்ரைனில் கெமிக்கல் அல்லது அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் துல்லியமாக தெரிகிறது" என கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்யா கெமிக்கல் குண்டுகளை உக்ரைனில் உபயோகித்தால், நேட்டோ பதிலடி கொடுக்கும் என பைடன் எச்சரித்திருப்பது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"எனக்கும் ஒன்னு செஞ்சு குடுங்க"..மரவேலையில் திறமையை காட்டிய நபர்..ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்..!

NATO, RUSSIA, CHEMICAL WEAPONS, BIDEN, UKRAINE, JOE BIDEN, RUSSIA UKRAINE CRISIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்