நிலவுக்கு அனுப்பப்படும் நியூக்ளியர் ரியாக்டர்.. நாசா போட்ட ஸ்கெட்ச் இதுக்குத்தானா?
முகப்பு > செய்திகள் > உலகம்நிலவில் நியூக்ளியர் ரியாக்டரை அமைக்க இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
Also Read | நேத்து மகனுக்கு... இன்னைக்கு மகளுக்கு.. வாரிசுகளுக்கு முக்கிய பதவியை அளித்த முகேஷ் அம்பானி..!
மனிதகுலம் அறிவியல் துறையில் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தி இருந்தாலும், விண்வெளி குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் நம்மால் பதிலளிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே பல மில்லியன் டாலர் செலவில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன உலக நாடுகள். நாள்தோறும் விண்வெளி பற்றிய புதிய புதிய தகவல்கள் நமக்கு கிடைப்பது இந்த ஆராய்ச்சிகளின் பலனாகத்தான். அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளி ஆய்வில் பல முத்திரைகளை பதித்திருக்கிறது. இந்நிலையில், நாசா நிலவில் நியூக்ளியர் ரியாக்டர் அதாவது அணு உலை ஒன்றை அமைக்க இருக்கிறது.
நிலவு திட்டம்
உலக நாடுகள் பலவும் நிலவு குறித்த ஆராய்ச்சியை கடந்த நூற்றாண்டு முதல் மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க - ரஷ்யா இடையேயான பனிப்போரில் உலகிற்கு தங்களுடைய அறிவியல் வளர்ச்சியை வெளிப்படுத்த, நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது அமெரிக்கா. அதனை தொடர்ந்து பல்வேறு செயற்கை கோள்களும், ரோவர்களும் நிலவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இப்படி நிலவுக்கு பயணிக்கும் விண்கலங்களுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்யவே இந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது நாசா.
இந்த தசாப்தத்திற்குள் நியூக்ளியர் ரியாக்டர் நிலவுக்கு அனுப்பப்பட இருப்பதாக நாசா அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தில் இயங்கிவரும் நாசா மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை இதற்காக 3 வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர்.
ஒப்பந்தம்
நிலவில் அணுக்கரு பிளவு முறையில் மின்சாரம் தயாரிக்க இருக்கும் நாசா, இதற்காக டெண்டர் கோரியுள்ளது. இதில் மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்திருக்கிறது. இந்த ரியாக்டர் மூலமாக 40 கிலோவாட் ஆற்றல் தயாரிக்கப்பட்டு, அவை நிலவு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றன.
40 கிலோவாட் மின்சாரத்தினை கொண்டு 10 ஆண்டுகளுக்கு 30 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை அளிக்க முடியும். இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிக முக்கிய சாதனையாக இது கருதப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நிலவில் உருவான 92 அடி பள்ளம்.. "இப்படி நடக்க சான்ஸே இல்லை" என குழம்பும் ஆராய்ச்சியாளர்கள்.. முழு விபரம்..!
- "எங்க கரப்பான் பூச்சியும் நிலாவுல இருந்து கொண்டுவந்த மண்ணும் எங்களுக்கு வேணும்".. ஏல நிறுவனத்துக்கு நோட்டிஸ் விட்ட நாசா.. என்ன நடந்துச்சு?
- விண்வெளி வரலாற்றுல இப்படி ஒரு ரிஸ்க்-அ யாரும் எடுத்ததில்லை.. செம்ம தில்லுப்பா இவருக்கு.. நாசா பகிர்ந்த வைரல் புகைப்படம்..!
- அது என்ன வைரம் மாதிரி ஜொலிக்குது?...செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பொருள்.. வைரலாகும் புகைப்படம்..!
- செவ்வாய் கிரகத்துல ரகசிய பாதை..?.. முதன்முறையாக மவுனத்தை கலைத்த நாசா ஆராய்ச்சியாளர்கள்..!
- செவ்வாய் கிரகத்துல இருக்கும் ரகசிய பாதை?.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய உண்மை..!
- ‘ஈபிள் டவரை விட பெரிசு’.. பூமியை நோக்கி வேகமாக வரும் சிறுகோள். நாசா எச்சரிக்கை..!
- விண்வெளிக்கு நிர்வாணப் படங்களை அனுப்பும் நாசா? எதற்காக தெரியுமா? – சுவாரஸ்ய பின்னணி!
- மணிக்கு 47 ஆயிரம் கிலோமீட்டர் வேகம்.. பூமியை நெருங்கும் ஆபத்தான விண்கல்..? நாசா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
- ஏலியனின் விண்கலமா? செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பொருள்.. மிரண்டு போன நாசா..!