செப்டம்பர் 26 ஆம் தேதி நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. உச்சகட்ட பரபரப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வரும் செப்டெம்பர் மாத இறுதியில் சிறுகோள் ஒன்றின் மீது விண்கலத்தை மோதச்செய்ய உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதம்.. திறந்து பார்த்தப்போ உள்ள இருந்த ரகசிய செய்தி.. ஷாக் ஆகிப்போன இளம்பெண்..!

விண்வெளி எப்போதுமே பல ஆச்சர்யமான விஷயங்களை தன்னிடத்தே கொண்டிருக்கின்றன. மனிதர்கள் ஆரம்பம் முதலே விண்வெளி குறித்த ஆய்வில் ஈடுபட்டு வந்தாலும், விடை தெரியாத பல கேள்விகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக பல செயற்கை கோள்களை உலக நாடுகள் விண்வெளிக்கு செலுத்தி, பலவிதமான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

சிறுகோள்கள்

சூரிய மண்டலத்தில் கோள்களை போலவே, பல சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவையும் அமைந்து உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டிடிமோஸ் எனும் இரட்டை சிறுகோள்கள் அமைப்பு. டிடிமோஸ் என்னும் சிறுகோள் 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டம் உடையது. இந்த டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.

இந்த விண்கல் அமைப்பு 1996 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காணிப்பு திட்டத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜோ மொன்டானி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது துவங்கி இந்த சிறுகோளை நாசா ஆய்வு செய்துவருகிறது. இதில் சிரமத்தை ஏற்படுத்துவது இந்த இரண்டு சிறுகோள்களும் அமைந்திருக்கும் இடம் தான். பூமி, சூரியனை சுற்றுவதை விட குறைவான வேகத்தில் டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.

சுற்றுப்பாதையில் மாற்றம் 

முன்னும் பின்னுமாக இவற்றின் இயக்கம் இருப்பதால் டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதையை மாற்றியமைக்க திட்டமிட்டது நாசா. இதற்காகவே பிரத்தேயகமாக DART எனும் விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கிய பணியே டிமார்போஸ் சிறுகோளை தாக்குவது தான். மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து டிமார்போஸ்-ஐ இந்த விண்கலம் தாக்கும்.

இதனால், சிறுகோளின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்த மோதல் நிகழ இருக்கிறது. இதனால் ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், விண்வெளி ஆய்வில் இது புதிய மைல்கல்லாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

Also Read | நீரஜ் சோப்ராவா..ஆஷிஷ் நெஹ்ராவா..?.. பாகிஸ்தானை சேர்ந்தவரின் துடுக்கான பதிவு.. சேவாக் போட்ட 'தெறி' கமெண்ட்..!

NASA, SPACECRAFT, ASTEROID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்