அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நாசா.. யம்மாடி என்ன இப்படி இருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையே புரட்டிப்போட்ட இயான் புயலின் தாக்கம் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
Also Read | இயற்கையின் இன்னொரு முகம்.. 30 நிமிஷத்துல இடத்தையே தலைகீழா புரட்டிப்போட்ட புயல்.. மிரள வைக்கும் வீடியோ..!
இயான் புயல்
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கியது. இதனால் அந்நாட்டின் மின்கட்டுமானம் மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் கடுமையான மழைப்பொழிவு ஒரு பக்கமும், அதிவேக புயல்காற்று ஒருபக்கமும் போட்டு புளோரிடாவை வதைத்து வருகிறது.
இந்த இயான் புயல் அமெரிக்கா சந்தித்த மோசமான புயல்களில் ஒன்று என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். புளோரிடாவில் புயல் காரணமாக மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 2 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2.5 மில்லியன் மக்கள் வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரையில் 20 பேரை காணவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
தேசிய வானிலை சேவை இயக்குனர் கென் கிரஹாம் இதுபற்றி பேசுகையில், "இது பல ஆண்டுகளுக்கு நாம் பேசும் புயலாக இருக்கும். இது ஒரு வரலாற்று நிகழ்வு" என்றார். இந்த புயலினால் புளோரிடா மட்டும் அல்லாது தென்கிழக்கு மாநிலங்களான ஜார்ஜியா மற்றும் தென் கரோலினாவில் பல மில்லியன் மக்களை பாதிக்கும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திகைக்க வைக்கும் வீடியோ
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச விண்வெளி அமைப்பு இயான் புயலை கடக்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது நாசா. பூமியில் இருந்து சுமார் 415 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. இதுவரையில் இந்த வீடியோவை 1.6 மில்லியன் மக்கள் பார்த்திருக்கின்றனர்.
Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. திடீர் பின்னடைவை சந்தித்த தொழிலதிபர் அதானி.. முழுவிபரம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மணிக்கு 240 கிமீ வேகத்துல வீசிய புயல்.. சாலையில் சிக்கிய செய்தியாளர்.. போராடி மீண்ட திக் திக் வீடியோ..!
- தட்டி வீசிய புயல்.. மொத்த நாட்டுக்கும் கரண்ட் கட்.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ அதிகாரிகள் சொல்லிய பகீர் தகவல்..!
- இப்படியா பண்றது?.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு.. நாசாவின் மெகா திட்டம்.. மஸ்க் பகிர்ந்த மீம்..!
- ரூ.2000 கோடி திட்டம்.. விண்கலத்தை சிறுகோளில் மோதச்செய்த நாசா.. திகைக்க வைக்கும் வீடியோ..!
- விண்வெளியில் இன்னும் 3 நாள்ல நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. வரலாற்றுலயே இதான் ஃபர்ஸ்ட் டைம்.. Live ஆ பாக்கலாமாம்..!
- இனி விண்வெளிக்கே டூர் போகலாம்.. சீனா போட்ட பிளான்.. எல்லாம் சரி அந்த டிக்கெட் விலையை கேட்டா தான் தலை சுத்துது..!
- இவ்வளவு நாளா இப்படி ஒன்ன தான் தேடிட்டு இருந்தாங்க.. வெளிச்சத்துக்கு வந்த மில்லியன் வருஷ மர்மம்..!
- "இனிமே சூரியன பாக்குறப்போ எல்லாம் இந்த டவுட்டு தானே வரும்".. சூரியனின் நிறம் பற்றி எழுந்த விவாதம்.. விண்வெளி வீரர் சொன்னது என்ன??
- விண்வெளியில் விளைந்த அரிசி.. சாதித்து காட்டிய சீன விஞ்ஞானிகள்.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!
- நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் வெளியிட்ட 'Phantom Galaxy'-யின் திகைக்க வைக்கும் புகைப்படம்.. வெளிச்சத்துக்கு வந்த பல வருஷ மர்மம்..!