ஏலியனின் விண்கலமா? செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பொருள்.. மிரண்டு போன நாசா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் முக்கோண வடிவிலான மர்மப் பொருள் ஒன்று இருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.

Advertising
>
Advertising

பெர்சவரன்ஸ் ரோவர்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. இதனுடன் சிறிய அளவிலான இன்ஜெனியூனிட்டி என பெயரிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. விமானத்தை கண்டறிந்த ரைட் சகோதரர்கள் முதல் முறை உருவாக்கிய சிறிய விமானத்தின் பகுதிகளைக் கொண்டு இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டது .இதன் மூலமாக, பூமியை தாண்டி வேறு ஒரு கிரகத்தில் முதன்முதலில் ஹெலிகாப்டரை இயக்கி வரலாற்று சாதனை படைத்தது நாசா.

ஜூலை 30 ஆம் தேதி, 2020 ஆம் ஆண்டு நாசா அனுப்பிய இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தின் ஜெரெஸோ கிரேட்டர் என்னும் பகுதியில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப சூழல், அங்கு உள்ள மண் மற்றும் பாறைகளை சேகரித்தல் ஆகிய ஆராய்ச்சிகளில் இந்த ரோவர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏலியன் விண்கலமா?

இந்த ரோவருடன் அனுப்பப்பட்ட இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் இதுவரையில் 25 முறை செவ்வாய் கிரகத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள பயணம் செய்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தனது 26வது பயணத்தை மேற்கொண்டது இந்த ஹெலிகாப்டர். அப்போது, செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில், வெள்ளை நிறத்தில் கூம்பு போன்ற பொருள் இருக்கும் வீடியோவை பூமிக்கு அனுப்பியது ஹெலிகாப்டர். பார்க்க வேற்றுலக வாசிகளின் விண்கலம் போல இருந்த பொருளை கண்டதும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஆராய்ச்சியாளர்களே குழப்பத்தில் மூழ்கினர்.

விலகிய மர்மம்

அதன்பிறகு நடத்தப்பட்ட தொடர் பரிசோதனைகளில் அது இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க உதவிய பெர்சவரன்ஸ் ரோவரின் பாகங்கள் என்பதை நாசாவை சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

செவ்வாய் கிரகத்தில் கூம்பு போன்ற பொருள் இருப்பதை கண்டு நாசா விஞ்ஞானிகள் குழப்பமடைய பின்னர் அது ரோவரின் பாகங்கள் தான் என்ற தகவல்கள் வெளிவந்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

MARS, NASA, INGENUITY, செவ்வாய், நாசா, ஏலியன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்