கொரோனாவால் 'இயற்கையில்' ஏற்பட்டுள்ள... மிகப்பெரும் மாற்றம்... 'புகைப்படம்' வெளியிட்ட நாசா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் உலக நாடுகள் பலவும் சமூக விலகல், ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தி உள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் இயற்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக நாசா புகைப்படம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி வடகிழக்கு அமெரிக்காவில் சுமார் 30% அளவுக்கு காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் 2015 முதல் 2019-ம் ஆண்டு வரையில் காற்று மாசுபாடு உலகம் முழுவதும் அதிகமாக இருந்ததையும், தற்போது கொரோனா காரணமாக 2020-ம் ஆண்டில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்து இருப்பதாகவும் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பது, வாகனங்களின் குறைவான பயன்பாடு ஆகியவை காற்று மாசுபாட்டினை வெகுவாக குறைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்