"Black Hole சத்தம் இப்டி தான் இருக்கும்".. நாசா வெளியிட்ட ஆடியோ.. அமானுஷ்ய சத்தம் கேட்டு உறைந்து போன நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளி மையமான நாசா, விண்வெளி மற்றும் பூமியை போல உள்ள மற்ற கிரகங்கள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், நாசா வெளியிடும் ஆய்வு முடிவுகள் தொடர்பான செய்திகள், இணையத்தில் வெளியாகி கேள்விப்படும் பலரையும் உச்சகட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
சமீபத்தில் கூட, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேலக்ஸி தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், அறிவியல் உலகில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாலவும் இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகம் தொடர்பாகவும் சில தகவல்களை நாசா வெளியிட்டிருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது Black hole தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆடியோ வடிவிலான விஷயம், அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
கருந்துளை எனப்படும் Black Hole என்பது பல ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட நிலையில், இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. சில பெரு நட்சத்திரங்களின் வெடிப்பு நிகழும் போது, அதன் அழிவில் இருந்து தான் பொதுவாக கருந்துளைகள் உருவாவதாக கூறப்படுகிறது. அப்படி உருவாகும் இந்த கருந்துளைகளில், சிலவை சூரியனை போல பல மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கருந்துளையின் ஒலி எப்படி இருக்கும் என்பது குறித்த ஆடியோவுடன் கூடிய வீடியோ ஒன்றை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. விண்வெளியின் வெற்றிடத்தில் பொதுவாக ஒலி பயணிக்காது என நம்பப்படும் நிலையில், தற்போது நாசா வெளியிட்ட கருந்துளையின் சத்தம் என்பது சற்று அமானுஷ்யமான வகையில், பேய்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் முனகல் போல இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் வியந்து போய் தெரிவிக்கின்றனர்.
கருந்துளைக்கு மிக அருகில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஒலியானது, சற்று அச்சுறுத்தக் கூடிய வகையில் உள்ள நிலையில், மனித செவிப்புலன் வரம்புக்குள் வராத அளவு குறைவாக இருந்ததாகவும், அதனை பெருமளவில் மாற்றங்கள் செய்து, அனைவரும் கேட்கும் வகையில் வெளியிட்டதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையின் இருந்து ஒலி அலைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம், அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விண்வெளில இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட கேப்ஸ்யூல்.. உலக நாடுகள் எல்லாம் இதுக்காக தான் வெயிட்டிங்.. அப்படி உள்ள என்னதான் இருக்கு.. வீடியோ..!
- "இன்னைக்கும் நாளைக்கும் வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க".. நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு..!
- செப்டம்பர் 26 ஆம் தேதி நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. உச்சகட்ட பரபரப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!
- செவ்வாய் கிரகத்தில்.. நூடுல்ஸ் மாதிரி இருந்த பொருள்??.. குழம்பிய நெட்டிசன்கள்.. கடைசியில் 'நாசா' கொடுத்த விளக்கம்..
- "பூமி'ய இப்டி பாத்துருக்கவே மாட்டீங்க.." பிரம்மிப்பில் ஆழ்த்தும் புதிய பரிமாணம்.. 'European' விண்வெளி நிலையம் வெளியிட்ட புகைப்படம்..
- இதுவரை இப்படி ஒன்ன யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.. "ஒரே போட்டோ-ல 100 மில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரம்" .. நாசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்..!
- நிலவுல இருக்கும் மர்ம குகை... ஆய்வு செஞ்சப்போ தெரியவந்த உண்மை.. சந்தோஷத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள்..!
- "ஆரம்பத்துல சாதாரணமா தான் நெனச்சோம்.. இனி அத சரிபண்ண முடியாது".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் மோதிய விண்கல்.. வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!
- என்னங்க இது.. வானவில் கலர்ல இருக்கு.?.. இதுவரையும் புளூட்டோவை இப்படி யாருமே பார்த்திருக்க மாட்டாங்க.. நாசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.!
- "நீர், பனிமூட்டம், மேகம் எல்லாமே அந்த கோள்-லயும் இருக்கு".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அளித்த தகவல்.. சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த நாசா ஆய்வாளர்கள்..!